அரசு செய்த தவறுக்கு மாணவர்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? எனவே நடப்பு கல்வியாண்டில் மூன்றாவது மொழிப் பாடமாக ஜெர்மன் மொழியே தொடர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6 முதல் 8 வரையிலான வகுப்புகளில், ஜெர்மானிய மொழிக்கு பதிலாக சமஸ்கிருதத்தை மூன்றாவது மொழிப் பாடமாக சேர்க்க மனிதவள அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நேற்று கூறியதாவது: முறையான ஒப்புதல் இல்லாமல் ஜெர்மானிய மொழியை, மூன்றாவது மொழிப் பாடமாக முந்தைய மத்திய அரசு சேர்த்து விட்டதாகவும், அதை தற்போது தொடர முடியாது என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
அரசு செய்த தவறுக்கு மாணவர்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? எனவே நடப்பு கல்வியாண்டில் மூன்றாவது மொழிப் பாடமாக ஜெர்மன் மொழியே தொடர வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.