Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, November 10, 2014

    முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வு: இன்று முதல் விண்ணப்பம்

    முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை (நவம்பர்10) முதல் விநியோகிக்கப்பட உள்ளன. 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.

    இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நவம்பர் 10 முதல் 26-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
    சென்னையில் : சென்னை மாவட்டத்தில் இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் சென்னை நந்தனத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நவம்பர் 10-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை விநியோகிக்கப்படும் என சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனிதா தெரிவித்தார். விண்ணப்பத்தின் விலை ரூ.50 ஆகும்.

    No comments: