Pages

Monday, November 24, 2014

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

அரசு பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, வேலையில்லா ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கூட்டமைப்பின் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரியில் ஆசிரியர் பட்டய பயிற்சி முடித்து, கடந்த 6 ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது அரசு பள்ளியில் சி.பி.எஸ்.சி., பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் திட்டம் சிறப்பாக செயல்பட போதுமான ஆசிரியர்கள் இல்லாததால், பல்வேறு பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியர் தகுதி தேர்வில் 250 ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்று வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். அரசு பள்ளி மாணவர்களின் நலனையும், வேலையில்லா ஆசிரியர்களையும் கருத்தில் கொண்டு காலியாக உள்ள 244 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. வேலையின்றி தவிக்கும் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க அனைவரும் கோரிக்கை வைக்க வேண்டுகிறேன்


    M. GOPAL, Teacher, DINDIGUL
    9486229370

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.