Pages

Tuesday, November 25, 2014

'வல்லமை தாராயோ இந்த மாநிலம் குழம்பியே தவிப்பதற்கே': டி.ஆர்.பி., வேண்டுதல்? பொதுமக்கள் தவிப்பு!

முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, என்ன என்பது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவான அறிவிப்பை வெளியிடாததால், விண்ணப்பதாரர்கள் மத்தியில், குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில், காலியாக உள்ள, 1,807 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, இம்மாதம் 7ம் தேதி, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. ஜன., 10ம் தேதி, எழுத்துத் தேர்வு நடத்தப்பட உள்ளது.இதற்காக, இம்மாதம் 10ம் தேதி முதல், 26ம் தேதி வரை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மூலம், விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.
26ம் தேதி மாலை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, வரும் 26ம் தேதி, மாலை 5:00 மணிக்குள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், நேரில் ஒப்படைக்க வேண்டும். அதன்படி, விண்ணப்பங்களை ஆயிரக்கணக்கானோர் பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பித்து வருகின்றனர்.இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க, முதுநிலை பட்ட மேற்படிப்புடன், பி.எட்., படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு படித்திருக்க வேண்டும் என, தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது.ஆனால், முதுநிலை படிப்பு மற்றும் பி.எட்., படிப்புக்கு, இணையான கல்விதகுதிகள் எவை எவை என்ற தகவலை, ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவாக தெரிவிக்கவில்லை என, முதுநிலை கல்வி படித்தவர்கள் புகார் கூறியுள்ளனர்.
தேர்வு வாரியம்:இதுகுறித்து, விண்ணப்பதாரர்கள் சிலர் கூறியதாவது:இணையான கல்வித்தகுதி உள்ள பட்டப் படிப்பு என்ன என்பதே, எங்களுக்கு தெரியாமல் உள்ளது. இதற்கான அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிடவில்லை. அதனால், குழப்பம் நீடிக்கிறது.நாங்கள் பல்வேறு நிலையில் குழம்பி, முதன்மை கல்வி அலுவலகங்களை அணுகும் போது, சரியான பதில் அங்கும் கிடைக்கவில்லை. இதனால், இந்த தேர்வுக்கு, கல்வித்தகுதி பெற்றிருக்கிறோமா என தெரியாமலேயே, விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து அளித்துவருகிறோம்.அறிவிப்பு வெளியிடும் போதே, தேர்வுக்கு இணையான படிப்புகள் என்ன என்பதை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு வெளியிடாமல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள தால், எங்களுக்கு விண்ணப்ப படிவத்திற்கான பணம் வீணாகுமோ என்ற கவலையுடனே விண்ணப்பித்து உள்ளோம்.எனவே, உடனடியாக முதுநிலை ஆசிரியர் தேர்விற்கு, இணையான கல்வி தகுதி என்ன என்ற அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

1 comment:

  1. முதுகலை தமிழாசிரியர் வெற்றி நிச்சயம்!
    முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம்
    வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சி வழங்கப்படும். சிறப்பு வசதியாக சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகு வாரியாக சுமார் 30 தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது.

    சென்ற 2013 முதுகலை தமிழாசிரியர் -தேர்வில் 95 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில்பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாக படித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாரகுவோருக்கு இத்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும்.

    தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும்.தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு.
    தற்போது இத்திட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சேர்ந்து, தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
    .அவர்களுக்கான வினாத்தாட்கள் உடனுக்குடன் அனுப்பப்பட்டு வருகின்றன. தேர்வுக்கு மிகக்குறைந்த நாள்களே உள்ளதால் திட்டமிட்டு படடித்து வெற்றிக்கனியை பறியுங்கள்!

    மேலும் விவரங்களுக்கு
    வெற்றி- 7373967635

    பயிற்சியில் இணைந்தவர்களுக்கு உடனடியாகப் பாடப்பொருள் அனுப்பப்பட்டுஇதுவரை 6 தேர்வுகள் பாடத்திட்டத்தையொட்டி அலகு வாரியாக நடத்தப்பட்டுள்ளன.

    பயிற்சியில் இணைந்தவர்கள் சிலரது கருதுக்கள்

    ஞானப்பிரகாசம், காஞ்சிபுரம் 8807188270
    வழங்கப்பட்ட பாடப்பொருள் மிகச்சிறப்பாக உள்ளது.குறிப்பாக இலக்கிய திறனாய்வு பகுதியில் அமைப்பியல் , பின்னமைப்பியல் ,நவினத்துவம் பற்றிய செய்திகள் வேறு எந்த நூல்களிலும் இல்லாத புதிய தகவல்கள்

    இந்திரா, சிதம்பரம்
    ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் அனைத்துப்பகுதி தொகுத்து வழங்கியுள்ளது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

    நிஹாத் பெங்களூர்.
    பெங்களூரில் உள்ள எனக்கு நேரடி பயிற்சிக்கு வாய்ப்பில்லையே எனும் குறையை போக்கிவிட்டது தங்களின் பாடப்பொருளும், வினாத்தாள்களும்.

    ரிஹானா , மேலூர் நெல்லை
    நான் திட்டமிட்டு பதிப்பதற்கும்,படித்தபின் மதிப்பீடு செய்வதற்கும் உங்கள் வினாத்தாள்கள் பயனுடயதாக உள்ளது.வெற்றி பெறமுடியும் எனும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

    தாமரை, திருவண்ணாமலை

    தருமபுரிக்கு நேரில் வந்து பயிற்சி பெறமுடியாத சூழலில்.எனது ஊரிலேயெ பயிற்சியில் சேர்ந்துள்ளேன். உங்கள் பயிற்சியில் அளிக்கப்படும் வினாக்கள் மிகுந்த தரமுள்ளதாக உள்ளது.அதன் மூலம் நான் எப்படி படித்துள்ளேன் என நானே மதிப்பீடு செய்துகொள்கிறேன் பயிற்சி எனக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது

    மேலும் விவரங்களுக்கு
    வெற்றி- 7373967635

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.