பிரதமர் மோடி, காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ந்தேதி ‘தூய்மை இந்தியா’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் இந்தியா தூய்மையாக வைக்கப்பட்டு மகாத்மா காந்தியின் கனவு நிறைவேறும் என்று அவர் கூறினார்.
மோடியின் அழைப்பை ஏற்று பல்வேறு அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை செயல்படுத்த முன்வந்துள்ளனர்.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில முதல்வர் பட்னாவிஸ் மற்றும் கல்வித்துறை மந்திரி வினோத் தவ்டே ஆகியோர் பிர்ஹன்மும்பை நகராட்சி கல்வித்துறையில் தூய்மை இந்தியா திட்டத்தை இன்று தொடங்கி வைத்தனர். அப்போது ‘‘மாணவர்கள் தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவர்கள்’’ என்று மந்திரி வினோத் தவ்டே தெரிவித்தார். மேலும், மகாராஷ்டிரா மாநிலம் தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதில் முன்னோடி மாநிலமாக விளங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டை சுத்தப்படுத்த வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாணவர்களுடன் பட்னாவிஸ் மற்றும் மந்திரி வினோத் தவ்டே கலந்துரையாடினர். பின்னர், மாணவர்களுடன் சேர்ந்து முதல்வர் பட்னாவிசும் துடைப்பம் பிடித்து குப்பைகளை அகற்றினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.