Pages

Friday, November 21, 2014

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சுட்டி விகடன் சார்பாக 2014-செப்டம்பர் மாதம் நடைபெற்ற FA செயல் திட்டம் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சுட்டி விகடனனின் சான்றிதள் வழங்கி பாராட்டுதல் விழா நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சுட்டி விகடன் நடத்திய செயல் திட்டம் FA போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக தங்கள் ஆற்றலை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும்,அவர்களை ஊக்கபடுத்திய ஆசிரியைகளுக்கும் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பாராட்டு தெரிவித்தார்.
இவர்களை ஊக்கப்படுத்திய ஆசிரியைகள் திருமதி.முத்துலெட்சுமி,முத்து மீனாள் , சாந்தி, செல்வ மீனாள், வாசுகி ஆகியோரையும் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

 சுட்டி விகடன் சார்பாக பள்ளிக்கு  சுமார் 1100 ரூபாய் மதிப்புள்ள பாரதியார் கவிதைகள்,லேப்டாப் A டூ Z, ஆறாம் திணை  உட்பட 3புத்தகங்களும் வழங்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சான்றிதழ்கள் மற்றும் புத்தங்கங்கள் வழங்கிய சுட்டி விகடன் ஆசிரியர் மற்றும் நிர்வாகம் சார்ந்தவர்களுக்கும் பள்ளியின் சார்பாக நன்றி தெரிவிக்கபட்டது .

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.