தமிழகத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளில் விடுதியில் தங்கி வேலைப்பார்க்கும் இளங்கலை ,முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் காலை 4 மணிமுதலே தங்களுக்கான வகுப்புகளை கவனிக்க பாடம் நடத்த தேர்வை கண்காணிக்க சிறப்பு வகுப்பு என இரவு 10மணிவரை மற்றும் அதற்கு மேலும் தொடர்ந்து பணியாற்றிவருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதற்காக அவர்களுக்கு தனியார் பள்ளி நிர்வாகங்களால் குறைவான ஊதியமே அளிக்கப்படுவதாகவும் ஆனால் அடிமைகளை நடத்துவது போல் பணிச்சுமை கொடுப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட மதியம் 1 மணிவரையிலும் பின்னர் இரவு 8 மணிமுதல் 10.30வரை வகுப்புகளை எடுக்க வற்புறுத்துவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.. இதனை தடுக்க அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.. 8 மணிநேரத்திற்கு மேல் வேலைபார்க்க கட்டாயப்படுத்துவது சட்டப்படி பெருங்குற்றம் என்கிற நிலையில் இதுபோல் தங்களின்சுய லாபத்திற்காக பட்டதாரிகளை பாடாய் படுத்தும் தனியார்பள்ளிகளுக்கு அரசு உடனடியாக எச்சரிக்கை விடுக்க வேண்டும்.. இல்லாவிடில் பல பட்டதாரிகள் மனஅழுத்தத்திற்கு ஆளாகி நோயாளிகளாக மாறிவிடுவர்...... கல்விக்கட்டணத்தை நிர்ணயிக்க மட்டுமே நடவடிக்கை எடுக்கும் தமிழக அரசு...இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் தனியார்பள்ளி நிர்வாகங்களை கண்டிக்க தனிகவனம் செலுத்தாதது வருத்தமளிக்கிறது.. விரைந்து இதற்கென .நடவடிக்கை எடுக்குமா.. ??என்ற எதிர்பார்ப்பில் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் உள்ளனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.