Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, October 12, 2014

    TNTET: இடைநிலை ஆசிரியர்கள் வேதனை

    * நமக்கு கேட்கப்ப்பட்ட வினாக்களில் துல்லியத்தன்மை ஒரு துளியைக் கூட காணவில்லையே.ஒரு வினாவிற்கு இரண்டு விடை, மூன்று விடை, நான்கு விடையும் சரி என இழுத்துக்கொண்டே செல்கிறார்களே!!!

    அப்படியானால் கேட்கப்பட்ட வினாக்களின் நோக்கம்தான் என்ன?

    *என் நண்பன் ஒருவனிடம்   இரண்டு மணி  நேரம் கால அவகாசம் கொடுத்து ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2 வினாத்தாளுக்கான விடைகளை குறிக்கும்படி கூறினேன்.அவனும் ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு வினாத்தாளுக்குமான விடைகளையும் குறித்து முடித்தான்.மதிப்பீடு செய்து பார்க்கும் போது இரண்டிலும் முறையே 50; 50 மதிப்பெண்கள் பெற்றிருந்தான்.இது தோராயமாக 33% ஆகும்.

    இதேபோல் 10-ம் மற்றும் 12-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு வினாத்தாளை கொடுத்து பதிலளிக்க கூறியபோது அவனால் 10% மதிப்பெண்கள் கூட முழுமையாகப் பெற முடியவில்லையே.

    என்ன பண்றது அவன் இப்பதான் இரண்டாம் வகுப்பு படிக்கிறான்...

    *ரயில்வே டிபார்ட்மெண்ட்ல் சாதாரன  வேலைக்கான நோட்டிபிகேசன்ல கூட காலிபணியிடம் எவ்வளவு, தேர்வு முடிவு என்றைக்கு, பணிநியமனம் எப்போது என  எல்லா தகவல்களையும் தெளிவாக பெற முடிகின்றது.

    ஆனால் நமது  தகுதித்தேர்வில் துல்லியமான விடை எது என்று வெளியிட கூட இவர்களுக்கு தைரியம் இல்லை.

    எவ்வளவு காலிப்பணியிடம் என முன்னரே அறிவித்தால் அப்ளிகேசன் சேல்ஸ் ஆகுமா?ஆகாதா? என்ற சுயநல நோக்கம் தானே???
    நீங்கள் 1675 தான் இடைநிலை ஆசிரியர்களுக்கான காலிபணியிடம் என்று அறிவித்திருந்தால் நான் எதுக்கு எனக்கு ஒன்னு, என் சித்தப்பாவுக்கு ஒன்னுனு அப்ளிகேசன் வாங்குறேன்.

    ஆறு மாதம் வீட்டிலேயே உட்கார்ந்து பத்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்து புத்தகங்களையும் படிக்குறேன்.
    உங்களால ஒரு வினாவிற்கு சரியான விடை எது என கணிக்க முடிகிறதோ? இல்லையோ?

    எங்களால 1675 காலிபணியிடங்கள் மட்டும் இருக்கிறது என தெரிந்திருந்தால் +2 ல 85%,D.T.Ed ல 85 % Tet ல 100 மதிப்பெண்கள் எடுத்தால் கூட இந்த ஆண்டு பணிவாய்ப்பு கிடைக்காது என எங்களால் கணித்திருக்க முடியும்.கடந்த ஒரு வருடமாக காத்திருக்காமல் வேறு வேலைக்காவது சென்றிருப்போம் அல்லவா?

    SGT-ல் மதிப்பெண் தளர்வு  BC & MBC பிரிவினருக்கு கொடுத்ததன் நோக்கம் தான் என்ன? 82 மதிப்பெண் எடுத்த ஒருவனுக்கு, பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் ஆசிரியர் பட்டயப்பயிற்சியில் 100% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் கூட 72.80 தானே வெயிட்டேஜ் வரும்...
    இதுல நகைச்சுவை என்னவென்றால் இப்போது அதையும் ( 5%) பறித்து விட்டார்கள்.

    2012-ல் நம்மை திறமைசாலிகள் அல்ல என ஒதுக்கிய கரங்கள், தற்போது நாம் அதிஷ்டசாலிகள் அல்ல என மறுக்கின்றனர்.

    எங்களுக்கும் காலம் வரும்.
    நாங்களும் பாடம்(Teaching)  கற்பிப்போம்.
    (உங்களோட பாணியில் "விரைவில்").
           
    Article by

    சத்தியமூர்த்தி

    No comments: