ஒரு காட்டில் ஒரு பசு தனியாக மேய்ந்து கொண்டிருந்தது அந்த வழியாக வந்த கொடூர சிங்கம் பசுவின் மீது பாய்ந்தது, பசுவோ தன் உயிரை காக்க 30நிமிடம் போராடியது இறுதியில் பசுவை கடித்து கொன்று சாப்பிட்டது. மேலும் அந்த கொடூர சிங்கம் வேட்டையாட சென்றது அருகில் பத்து பசுக்கள் மேய்ந்தும் அதில் ஒன்று மட்டும் தனியே மேய்ந்து கொண்டிருந்தது..அதனை குறி வைத்து சிங்கம் பாய்ந்தது இதனை பார்த்து மற்ற பசுக்கள் தன் இனத்தை காக்க ஒன்று சேர்ந்து தனது கொம்பால் முட்டி சிங்கத்தை கொன்றது.
பார்த்தீர்களா ஆசிரியர் சொந்தங்களே!! ஒரு விலங்கு கூட தன் இனம் அழியாமல் இருக்க ஒன்று சேர்கிறது.
எந்தருமை ஆசிரியர் சொந்தங்களே இதை கதையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் எங்கள் கதறலாக, கண்ணீராக எடுத்துக்கொள்ளுங்கள்.
ஆரம்பத்தில் இருந்தே தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டனி,தமிழக தமிழாசிரியர் கழகம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், என சுமார் 40 சங்களின் செயல்பாடுகள் மற்றும் தீர்மானங்கள் பாராட்டுவதற்குரியது...
உங்க்ளைபோன்ற சங்களின் ஒருமித்த, உரத்த குரலினால் போராடியும், நீதிமன்றம் வாயிலாகவும் பல சாதனைகள் செய்துள்ளீர்கள் என்பது உண்மை உண்மை,மேலும் ஆசிரியர்களுக்கு தேவையான விடுப்புகள், ஊதிய உயர்வு, பதவி உயர்வு, உரிமைகளுக்கக பல போராட்டங்களை முன்னிறுத்தி வெற்றி கண்டுள்ளீர்கள் அதற்காக அனைத்து ஆசிரியர் கூட்டனி மற்றுன் சங்கங்களை மனதார பாராட்டுகிறேன்..
ஆகவே தற்போது ஆசிரியர் என்ற இனத்தை அழித்து வரும் வெய்ட்டேஜ் என்ற கொடூர சிங்கத்தை வீழ்த்த அனைத்து ஆசிரியர் சங்கங்களும் முன்வர வேண்டும்,அறிக்கை, தீர்மானம் மற்றும் அரசுக்கு பரிந்துரைக்க முன்வர வேண்டும் என ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் அமைப்பு தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறது.
Article: P.Rajalingam Puliangudi
Thank you Admin sir...Continue your Educational Service
ReplyDelete