வேலை நாட்களுக்கு மட்டும் தினமும் 20 ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாலும், வேறு எந்த அரசு சலுகைகளும் கிடைக்காததாலும், மாதம் 400 ரூபாய் சம்பளம் கூட கிடைக்காமல் பகுதிநேர நூலகர்கள் மனம் நொந்த நிலையில் 16 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர்.
நூலகத்துறையை தமிழக அரசு கண்டுகொள்ளவே இல்லை. இத்துறையில் 20க்கும் மேற்பட்ட மாவட்ட நூலக அலுவலர் பணியிடம் மூன்றாண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளது. இப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படவே இல்லை. அதேபோல் 35க்கும் மேற்பட்ட முதல்நிலை ஆய்வாளர் பணியிடங்களும் காலியாகவே உள்ளன. இப்பணியிடங்களும் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன.
இதேபோல் நூலகர் பணியிடங்கள், பகுதிநேர நூலகர் பணியிடங்கள் என காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தொடர்கதையாகிறது. பணிபுரிபவர்களுக்கு மனிதநேய சலுகைகள் கூட வழங்கப்படுவதில்லை. தமிழகம் முழுவதும் 16 ஆண்டுகளாக பணிபுரியும் பகுதிநேர ஊழியர்களுக்கு எந்த பணிப்பலன்களும் வழங்கப்படவில்லை.
1800 பகுதிநேர நூலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இதுவரை தினமும் 20 ரூபாய் சம்பளம் மட்டுமே வழங்கப்படுகிறது. அதுவும் வேலை நாட்களில் மட்டும்தான் சம்பளம். மாதம் 10 நாட்கள் வரை விடுமுறை வந்து விடுகிறது.
எனவே, இவர்களது மாதச்சம்பளமே 400 ரூபாய்தான். அதுவும் முறையாக வழங்கப்படுவதில்லை. என்றாவது ஒருநாள் நமக்கும், அரசு ஊழியர்களை போல் சலுகைகளும், சம்பளமும் கிடைக்கும் என்ற ஆசையில் வாழ்க்கையை தொலைத்துவிட்டு தவிக்கின்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.