Pages

Tuesday, October 28, 2014

அரசு உத்தரவு வராததால் பள்ளி மாணவர்களுக்கான இலவச காலணி தேக்கம்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச காலணி வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் இலவச காலணிகள் வழங்க தயாராக இருந்த நிலையில், முதல்வராக இருந்த ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனால், காலணி விநியோகம் குறித்து எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்ற பின்பும் இதுகுறித்து எந்த உத்தரவும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை.
தற்போது வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், உதவி தொடக்க கல்வி அலுவலங்களில் வைக்கப்பட்டுள்ள காலணிகள் சேதமடைய தொடங்கியுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் என ஆயிரத்து 119 பள்ளிகள் உள்ளன. இப்பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு வழங்க வேண்டிய காலணிகள் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அரசு உத்தரவு இல்லாததால் விநியோகம் செய்ய முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.