Pages

Wednesday, October 22, 2014

ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு பதிவுமூப்பு அறிவிப்பு

ராமநாதபுரம், பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர்களால் அறிவிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு, பதிவு மூப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்திருக்க வேண்டும். ஜூலை 1 அன்று ஆதிதிராவிடர், பழங்குடியினர் 18-35 வயது வரை, பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் 18-32 வயது வரை, பொது போட்டியாளர் 18-30 வயதுள்ளவர்களாக இருக்க வேண்டும்.


அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு இல்லை. பெண்கள் முன்னுரிமையுள்ளவர்கள் ஆதரவற்ற விதவைகள் பதிவு மூப்பு: ஆதிதிராவிடர், அருந்ததியினர், பழங்குடியினர், பிற்பட்டோர், முஸ்லிம் ஆதரவற்ற விதவைகள் அனைவரும்.

ஆதரவற்ற விதவைகளில் ஆதிதிராவிடர்கள் 2000 ஜூலை 3 வரை, மிகவும் பிற்பட்டோர் 2006 நவ.,27 வரை, பிற்பட்டோர் 2000 ஜூன் 30 வரை, பொது போட்டியாளர் 2006 பிப்.,20 வரை.

பெண்கள் முன்னுரிமையற்றவர்கள் பதிவு மூப்பு: ஆதிதிராவிடர்கள் 1986 ஜன., 10 வரை, மிகவும் பிற்பட்டோர் 1985 ஜூலை 9 வரை, பிற்பட்டோர் 1982 ஜூலை 8 வரை, பொது போட்டியாளர் 1983 ஜன.,31 வரை.

மாற்றுத்திறன் பெண்கள் பதிவு மூப்பு: ஆதிதிராவிடர்கள் 1995 மார்ச் 6 வரை, மிகவும் பிற்பட்டோர் 1994 ஜூன் 13 வரை, பிற்பட்டோர் 1989 ஜூன் 19 வரை, பொதுப்போட்டியாளர் 1990 டிச.,31 வரை.

முன்னுரிமையற்றவர்கள் பொது ஆண்கள், பெண்கள் பதிவு மூப்பு: அருந்ததியர் 1985 ஜூலை 12 வரை, ஆதிதிராவிடர் 1983 ஜூலை 13 வரை, மிகவும் பிற்பட்டோர் 1984 ஜூலை 11 வரை, பிற்பட்டோர் 1982 ஜூலை 1 வரை, பொதுப்போட்டியாளர் 1982 டிச., 31 வரை.

மாற்றுத்திறன் ஆண்கள், பெண்கள்: அருந்ததியர் 1992 ஜூன் 25 வரை, ஆதிதிராவிடர் 1990 ஜூன் 25 வரை, மிகவும் பிற்பட்டோர் 1992 ஜூன் 24 வரை, பிற்பட்டோர் 1989 ஜூன் 19 வரை, பொதுப்போட்டியாளர் 1991 ஜூலை 31 வரை.

தகுதியுடைய பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பு பதிவு அட்டை, அனைத்து சான்றிதழ்களுடன் அக்., 23 க்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வந்து பரிந்துரை விபரம் தெரிந்து கொள்ளலாம், என கலெக்டர் நந்தக்குமார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.