Pages

Saturday, October 25, 2014

பத்தாம் வகுப்பு தனி தேர்வர்கள் விண்ணப்பிக்க அரசு மையங்கள் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மூன்று கல்வி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தனி தேர்வர்கள் விண்ணப்பிக்க அரசு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


செப்., 25 முதல் அக் 4 வரை பத்தாம் வகுப்பு துணை தேர்வு எழுதிய தனி தேர்வர்கள், தேர்வு எழுதிய மையத்திலேயே மதிப்பெண் சான்றிதழைப் பெற்று கொள்ளலாம். அதேபோல் மார்ச்,ஏப்., ல் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் அக்., 10 முதல் நவ., 7 வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வு துறை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

இதற்காக விருதுநகர் கல்வி மாவட்டத்தில் கே.வி.எஸ்., மேல்நிலை பள்ளியில் ஆண்கள், சத்திரியா பெண்கள் மேல்நிலை பள்ளியில் பெண்கள், சிவகாசி எஸ்.ஹெச்.என்.வி. மேல்நிலை பள்ளியில் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் எஸ்.பி.கே., மேல்நிலை பள்ளியில் ஆண்கள், எஸ்.பி.கே., பெண்கள் பள்ளியில் பெண்கள், திருச்சுழி டி.யு.என்.எஸ்.வி., பள்ளியில் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் ஜி.எஸ்., இந்து பள்ளியில் ஆண்கள், இருதய பெண்கள் மேல்நிலை பள்ளியில் பெண்கள், ராஜபாளையம் பி.ஏ.சி.எம். மேல்நிலை பள்ளியில் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.