கன்னியாகுமரி மாவட்டத்தில் 130 அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் உள்ளன. இங்கு சுமார் 70 ஆயிரத்து 500 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இப்பள்ளிகளில் 2753 ஆசிரியர்கள் உள்ளனர். இதையடுத்து 129 அரசுப்பள்ளிகளில் 27 ஆயிரத்து 900 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.இங்கு 2180 ஆசிரியர்கள் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் கல்வித்துறையானது அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் 619 ஆசிரியர்களும் , அரசுப்பள்ளியில் 391 ஆசிரியர்களும் உபரியாக உள்ளதாக அறிவித்தது.
இந்த அறிவிப்பிற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது முற்றிலும் குளறுபடியான அரசானை எனவும், கடந்தகால மரபுகளை கல்வித்துறை மீறியுள்ளதாகவும் தெரிவித்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் , தற்போது மாணவர்களுக்கு கற்றல் நுணுக்கம் , பொது அறிவு வேண்டியுள்ளதால் அசிரியர்களுக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளதாகவும், தலைமை ஆசிரியர்கள் ஒருவாரம் 40 வகுப்புகள் நடத்தவேண்டும் என கல்வித்துறை தெரிவித்து உள்ளதாகவும் , இது எந்த வகையில் சாத்தியம் எனவும் தெரிவித்த அவர்கள் அரசின் இந்த அறிவிப்பினை எந்த ஒரு கல்வியாளரும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தனர். இந்த அரசாணையினை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் மாணவர்கள் நலன் கருதி கல்வித்துறை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் எனவும் இப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும் எனவும் பல்வேறு கோரிக்கைகள் எழுந்தது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.