Pages

Saturday, October 25, 2014

நவம்பர் முதல் வாரத்தில் தொடக்கப்பள்ளி / நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதாக தொடக்கக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளதாக தகவல்

தமிழக ஆசிரியர் கூட்டணி இயக்க இதழான ஆசிரியர் இயக்கக் குரலிலும், நேர்முகமாகவும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பி ஆசிரியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி வந்தோம்.

அந்தோ பரிதாபம் என்ற தலைப்பில் காலியாக உள்ள உ.தொ.க.அ. காலிப் பணியிடங்களின் பட்டியலை வெளியிட்டு வந்தோம். 25-10-2014 அன்று நடைபெற்ற உ.தொ.க.அ. பணிமாற்ற கலந்தாய்வில் 64 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உ.தொ.க.அலுவலர்களாக பணி மாற்ற ஆணை வழங்கியுள்ளார்.


மேல்நிலைக் கல்வித்தகுதிக்கு இணையாக diploma in teacher education படித்தவர்களுக்கும் உ.தொ.க.அலுவலர் பணிமாற்ற ஆணை வழங்கி இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் வா.அண்ணாமலை அவர்கள் தொடக்கக் கல்வி இயக்குநருக்கு தொலைப்பேசியில் நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொண்டார்.

பலமுறை கேட்டுக் கொண்டதற்கிணங்க நவம்பர் முதல் வாரத்தில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், தமிழ், வரலாறு, ஆங்கிலம், கணிதம், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை ஒரேநாளில் நடத்துவதாக தொடக்கக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. வாழ்க வாழ்க
    தமிழக ஆசிரியர் கூட்டணி
    ஆசிரியர்களின் நலம் காக்கும் இயக்கம்
    M. GOPAL, TEACHER, DINDIGUL
    9486229370

    ReplyDelete
  2. வாழ்க வாழ்க
    தமிழக ஆசிரியர் கூட்டணி
    ஆசிரியர்களின் நலம் காக்கும் இயக்கம்
    M. GOPAL, TEACHER, DINDIGUL
    9486229370

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.