”முழுவதும் சுய கற்பனையால் கட்டப்படுவது தான் படைப்பாற்றல்,” என, சங்கீத நாடக அகாடமியின் உறுப்பினர், பப்பு வேணுகோபால் ராவ் பேசினார். சென்னையில், சாய் பிரபஞ்ச் என்ற, கல்லூரி மாணவர் எழுதிய ’கான்ட்ராக்டர்’ என்னும், ஆங்கில நாவல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு, பப்பு வேணுகோபால் ராவ் பேசியதாவது:
தயாரிப்புகள், இந்த உலகத்தில் மலிந்து கிடக்கின்றன. ஆனால், படைப்பாற்றலுடன் கூடிய தயாரிப்புகள் தான் அரிதாக இருக்கின்றன. ஏற்கனவே சொல்லப்பட்ட கதைக்கு நடனம் அமைப்பது, ஏற்கனவே மெட்டமைத்த பாடலை கற்று கொண்டு பாடுவது போன்றதல்ல படைப்பாற்றல்.
அது முழுக்க முழுக்க சுய கற்பனையால் கட்டப்படுவது. அப்படி, ஒருவரின் சுய கற்பனையால் கட்டப்படும் ஒரு படைப்பு, ரசிகனை, இன்னொரு உலகத்திற்கு அழைத்து செல்வதாக இருந்தால், அது சிறந்த படைப்பாக கருதப்படும். அந்த வகையில், ’கான்ட்ராக்டர்’ நாவல் சிறந்த படைப்பாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இளைஞர்களுக்கு பிடிக்கும்:
நூலாசிரியர் சாய் பிரபஞ்ச் பேசுகையில், ”இந்த கதையை, முழுக்க வேறு உலகத்தில் நடப்பது போல் அமைத்துள்ளேன். இதை, ஐந்து தொகுதிகளாக வெளியிட திட்டமிட்டுள்ளேன். இது, வித்தியாசமான, தந்திர காட்சிகள் நிறைந்ததாகவும், சிறுவர்கள், இளைஞர்களுக்கு பிடித்ததாகவும் இருக்கும்,” என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.