தமிழகம் முழுவதும், அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கான, வரைவு வாக்காளர் பட்டியல், இன்று வெளியிடப்படுகிறது. இப்பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை, வாக்காளர் அறிந்து கொள்ள, தேர்தல் கமிஷன் சார்பில், எஸ்.எம்.எஸ்., சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்சேவை, இன்று அல்லது நாளை முதல் அமலுக்கு வரும். எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அறிய
விரும்புவோர், EPIC என டைப் செய்து, ஸ்பேஸ் விட்டு, வாக்காளர் அடையாள அட்டை எண்ணை குறிப்பிட்டு, 94441 23456 என்ற எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், சம்பந்தப்பட்ட நபரின் பெயர், முகவரி, எந்த ஓட்டுச்சாவடி யில் பெயர் உள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்படும். வாக்காளர் அடையாள அட்டை எண் இல்லாதோர், தேர்தல் கமிஷன் இணையதளத்தில், தங்கள் பெயர் மற்றும் தந்தை பெயரை குறிப்பிட்டு, தேடிப் பார்க்கலாம்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.