பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் அறிவு, திறமையை சோதிக்கும் வகையில் வினாத்தாள்களை தயார் செய்ய வேண்டும் என்று இந்திய தேசியத் தேர்வுப்பணி தலைவர் மு.பாலகுமார் வலியுறுத்தினார். இந்திய தேசியத் தேர்வுப்பணி (மைசூர்), தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலம் இணைந்து ஆசிரியர்களுக்கு வினா உரு எழுதுதல் மற்றும் வினா வங்கி உருவாக்குதல் குறித்த பயிலரங்கம் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கியது.
பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன் தலைமை தாங்கினார். தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலம் பேராசிரியர் மற்றும் இயக்குநர் சு.பாலசுப்பிரமணியன், பதிவாளர் கி.முருகன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல் கலைக்கழகத்தின் துணைவேந்தர் ப.வணங்காமுடி, இந்திய தேசியத் தேர்வுப்பணி தலைவர் மு.பால குமார் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தனர்.
பயிலரங்கத்தில் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் உள் ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகத் தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிலரங்கத்தில், இந்திய தேசியத் தேர்வுப்பணி தலைவர் மு.பாலகுமார் பேசியதாவது:
தமிழகத்தில் தேர்வு முறைகளை முறைப்படுத்தினாலே, கல்வி முறைகளில் உள்ள குளறுபடிகள் சரியாகிவிடும். இந்தியாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளிக்கவே, இந்திய தேசியத் தேர்வுப்பணி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியா முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வு நேரத்தில் கடந்த 5 ஆண்டு வினாத்தாள்களை பார்த்தாலே, தேர்வில் தேர்ச்சி பெற்றுவிடலாம், அதிக மதிப்பெண் பெறலாம் என்ற தவறான எண்ணம் மாணவர்களிடையே இருக்கிறது. அதனால் மாணவர்களின் அறிவு மற்றும் திறமையை சோதிக்கும் வகையில் வினாத்தாளை தயார் செய்ய வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.