Pages

Wednesday, October 22, 2014

"திறன்மிக்க மாணவ சமுதாயத்தை உருவாக்கும் புனித பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு"

"ஒவ்வொரு ஆசிரியரும் சமுதாயத்தின் ஒளி விளக்குகள். திறன்மிக்க மாணவ சமுதாயத்தை உருவாக்கும் புனித பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு" என மதுரை முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி பேசினார்.

மதுரையில் தினமலர் லட்சிய ஆசிரியர் 2014 விருதுக்கு தேர்வானவர்களுக்கு விருது வழங்கி அவர் பேசியதாவது: கல்வி மூலம்தான் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும் என்ற உண்மையை உணர்ந்து, ஆண்டுதோறும் இப்போட்டிகளை நடத்தி திறமையான ஆசிரியர்களை சமுதாயத்திற்கு அடையாளம் காட்டும் உன்னத பணியை தினமலர் மேற்கொண்டு வருகிறது. இது, ஆசிரியர் சமுதாயத்திற்கு செய்யும் சேவை.


அறிவுசார்ந்த சமூக வளர்ச்சியை அளவுகோலாக வைத்து ஒரு நாடு முன்னேறியதற்கான அடையாளம் காணப்படுகிறது. இதற்கு முக்கிய பங்காற்றுபவர்கள் ஆசிரியர்கள். அதனால்தான் கடவுளுக்கு முன்னதாக அவர்களை நாம் நினைவு கூர்கிறோம். ஆசிரியர் பணிக்கு முடிவு என்பது இல்லை. அவர்கள் மூலம் முன்னேறும் மாணவர்களால், எங்கும், எப்போதும் ஆசிரியர்கள் நினைத்துக் கொண்டுதான் இருப்பர். கல்வியை தவிர்த்து பிற துறைகளில் இதுபோன்று இல்லை.

நல்ல ஆசிரியர்கள்: சமுதாயத்தின் ஒளி விளக்குகள். நாட்டின் வளர்ச்சியை நிர்ணயிக்கும் திறன்மிக்க மாணவர்களை அவர்கள்தான் உருவாக்க முடியும். கோயில் பணிக்கு இணையானது, ஆசிரியர் பணி. மாணவர்களின் திறன்களை படித்து, பாடத்திட்டங்களை தாண்டி சிந்திக்கும் விஷயங்களை கற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் திறன்மிக்க தலைமுறைகள் உருவாகும் என்றார்.

விருதுபெற்ற லட்சிய ஆசிரியர்கள்

பெ.சிவராமன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சிட்டம்பட்டி.

மு.சத்திய பாமா, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அலங்காநல்லூர்.

ஏ.சூசை மாணிக்கம், தலைமை ஆசிரியர், புனித கிளாரட் மேல்நிலைப் பள்ளி, கருமாத்தூர்.

ம.ஆரோக்கிய செல்வராஜ், ஆர்.சி., நடுநிலைப் பள்ளி, காதக்கிணறு.

த.சூரிய குமார், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மேலூர்.

கே.சலோமி, லூர்து அன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கோ.புதூர்.

நூ. அஸ்மத் பாத்திமா, எஸ்.எஸ்.எம்.அகாடமி, அக்கரைப்பட்டி, திண்டுக்கல்.

கே.பி. ரவீந்திரன், என்.எஸ்.வி.வி., ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பட்டிவீரன்பட்டி.

பா.சுப்புலட்சுமி, நகராட்சி உயர்நிலைப் பள்ளி, தேவகோட்டை.

எஸ்.பார்வதி மீனாட்சிசுந்தரம், அருள்மிகு பழனியாண்டவர் மெட்ரிக் பள்ளி, பழனி.

ச.ஜெயராமன், எம்.எஸ்.பி., சோலை நாடார் நினைவு மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்.

கோ.வீரசத்திய ராமசாமி, அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி, மார்க்கையன்கோட்டை, தேனி.

ம.அமுதா, பாரததேவி ஆரம்பப்பள்ளி, கடமலைகுண்டு.

சி.நந்தினி, கம்மவார் மெட்ரிக் பள்ளி, தேனி.

ச.மாரியப்பன், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கம்பம்.

ஏ. மெஹராஜ், சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப்பள்ளி, கீழக்கரை.

எஸ்.அய்யப்பன், ஆர்.எஸ். அரசு மேல்நிலைப் பள்ளி, பரமக்குடி.

ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, கடலாடி ஒன்றியம், ராமநாதபுரம்.

டி.சாவித்திரி, ராமநாதன் செட்டியார் நகராட்சி தொடக்கப் பள்ளி, காரைக்குடி.

க.லட்சுமி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, செவரக்கோட்டை, சிவகங்கை.

சேவு. முத்துக்குமார், மீனாட்சி சுந்தரேஸ்வரர் வித்யாசாலா மேல்நிலைப் பள்ளி, காரைக்குடி.

பூ.அமுதன், அரசு உயர்நிலைப் பள்ளி, குருந்தமடம், அருப்புக்கோட்டை வட்டம்.

ச. அரவிந்தன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, திம்மாபுரம்.

பி.வில்சன் பிரபாகரன், தி.உ.நா.ச. வைத்தியலிங்கம் மேல்நிலைப் பள்ளி, திருச்சுழி.

த. தமிழ்ச்செல்வி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கான்சாபுரம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.