மாணவர்களின் கல்வி ஆவணங்களில் அரசு அதிகாரிகளிடம் சான்றொப்பம் பெறும் முறையைக் கைவிடுமாறும், மாணவர்களின் சுய சான்றளிப்பு ஆவண நகல்களைப் பெறுமாறும் பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும் யுஜிசி கடந்த 26ஆம் தேதி அனுப்பிய உத்தரவில் இதைத் தெரிவித்துள்ளது. ஒரு வாரத்துக்குள் இதை அமல்படுத்த அவசர
நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் இந்த உத்தரவை அமல்படுத்தியதை உறுதிப்படுத்தும் வகையில் அறிக்கை அனுப்பி வைக்குமாறும் பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மதிப்பெண் பட்டியல், பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்டவற்றில் சான்றொப்பம் வழங்கும் அதிகாரிகளின் கையொப்பத்தைப் பெறுவதில் பல்வேறு சிரமங்களை மாணவர்கள் அனுபவிக்கின்றனர். கிராமப்புற மாணவர்களுக்கு இது கூடுதல் சிரமத்தை அளிக்கிறது. எனவே, யுஜிசியின் இப்போதைய உத்தரவு, நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், சேர்க்கைக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கும் பெரும் பயனளிக்கக் கூடியதாக அமைந்துள்ளது.
மாணவர்களிடம் சுய சான்றளிப்பு ஆவண நகல்களைப் பெறுவது என்பது இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்த ஆணையத்தின் பரிந்துரைப்படி மேற்கொள்ளப்படுகிறது. நடைமுறைகளை எளிதாக்குவதற்காக இந்தப் பரிந்துரையை இந்த ஆணையம் பரிந்துரைத்திருந்தது.
இது குறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், மாணவர்களிடம் சுய சான்றளிப்பு ஆவண நகல்களைப் பெறும் நடைமுறையை சில பல்கலைக்கழங்கள் ஏற்கெனவே தொடங்கி விட்டதாகத் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.