Pages

Friday, October 31, 2014

சாமர்த்தியமாக செயல்பட்டு தனது தாயை பலாத்காரத்திலிருந்து காப்பாற்றியுள்ள சிறுமி

மும்பையில் நான்கு வயது சிறுமி சாமர்த்தியமாக செயல்பட்டு தனது தாயை பலாத்காரத்திலிருந்து காப்பாற்றியுள்ள சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் கடந்த திங்களன்று காலை 7 மணி அளவில் ஜெயபால் என்ற வாலிபர், ஒருவர் வீட்டினுள் நுழைந்து கத்தி முனையில் அங்கிருந்த பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.
அப்பெண்ணின் கணவர் வெளியே சென்றிருப்பதை நோட்டமிட்டு ஜெயபால் அந்த வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அப்பெண், தன் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள போராடியுள்ளார். இதற்கிடையே தாயின் அலறலைக் கேட்டு கண் விழித்த அவரது நான்கு வயது மகள், தொடர்ந்து தூங்குவதைப் போல் நடித்துள்ளார்.
தக்க சமயத்தில் வீட்டிலிருந்து வெளியேறி அக்கம்பக்கத்தாரிடம் தங்கள் வீட்டில் திருடன் புகுந்திருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து விரைந்து வந்த அவர்கள், ஜெயபாலைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் ஜெயபால் மீது ஏற்கனவே இதுபோன்ற பாலியல் புகார்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. எப்போதும் பையில் கத்தியுடன் சுற்றி வரும் ஜெயபால், ஆண்கள் வெளியில் சென்றிருக்கும் வீடுகளாக நோட்டமிட்டு அவ்வீட்டில் உள்ள பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. நான்கு வயது சிறுமி சாமர்த்தியமாக செயல்பட்டதால் அவரது தாயார் காப்பாற்றப்பட்டுள்ளார்.

3 comments:

  1. நல்ல குழந்தை...

    ReplyDelete
  2. நல்ல குழந்தை...

    ReplyDelete
  3. வாழ்க சிறுமி
    விழிப்புணர்வு தேவை

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.