'நகர பகுதிக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதால், பள்ளிகளுக்கு தீபாவளிக்கு ஓரிரு நாள் முன்னதாக, விடுமுறை அளிக்க வேண்டும்' என பெற்றோர் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.வரும் 22ல், தீபாவளி கொண்டாடப்படுகிறது; அன்று ஒருநாள் மட்டும், பள்ளிகளுக்கு அரசு விடுமுறையாக உள்ளது.
போக்குவரத்து மிகுந்த இடங்களில், ரோட்டை கடக்கவும், நெரிசலான பஸ்களில் பயணிக்கவும் மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர். எனவே, 'வரும் 20 மற்றும் 21ம் தேதிகளில், நகர பகுதிக்குள் உள்ள பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து, தீபாவளிக்கு பிறகு வரும் அரசு விடுமுறை நாளில், பள்ளியை பணி நாளாக செயல்படுத்த வேண்டும்' என பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. வெளியூர் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அதிகமுள்ள திருப்பூரில், தொழிலாளர்கள் பலரும் குடும்பத்துடன், தங்களது சொந்த ஊரில் தீபாவளி கொண்டாட செல்வது வழக்கம்.
சனி, ஞாயிறுகளில் அவர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வதால், பெரும்பாலான மாணவர்கள் தீபாவளிக்கு முந்தைய நாட்களில் பள்ளிக்கு வருவதில்லை. அந்நாட்களில், பல பள்ளிகளில், மாணவர் வருகை வெகுவாக குறைகிறது.
கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, '
கோவில் விழா, பண்டிகை நாட்களில், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெற்றோர் வேண்டுகோளை ஏற்று, தலைமை ஆசிரியர் முடிவு செய்து, பள்ளிக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கலாம்; அந்த நாளுக்கு பதிலாக, மற்றொரு விடுமுறை நாளில் பள்ளி செயல்பட வேண்டும். அரசு தரப்பில், விடுமுறையாக அறிவிக்க முடியாது. ஆண்டுக்கு ஏழு நாள் வீதம், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளூர் விடுமுறை அளிக்க, விதிமுறைப்படி வாய்ப்புள்ளது,' என்றனர்.
தீபாவளி பண்டிகைக்கு பள்ளிக்கு வர முடியாதவர்கள் தேவைக்கேற்ப விடுப்பு எடுத்துக்கொள்ளலாமே. அதை விடுத்து அரசை ஏன் விடுப்பு அளிக்க நிர்பந்திக்க வேண்டும்.
ReplyDeleteDipawali. Hindu festival...
ReplyDeleteTNTET : ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளிகளின் இடைநிலை ஆசிரியர் பட்டியல் விரைவில் வெளியீடு?
ReplyDeleteவிருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்தூரை சார்ந்த மாற்றுத்திறனாளி ராமர் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் தற்போதைய பணிநியமன முறையே பின்பற்றலாம் மேலும் மனுதாரருக்கு பதில் அளிக்க மட்டுமே சம்மன் அனுப்பபட்டது..
ஆகவே ஆதிதிராவிடர் நலப்பள்ளி தேர்வுப்பட்டியல் வெளியிடுவதில் எந்த சிக்கலும் இல்லை..நோட்டிபிகேசனில் வெளியிடப்பட்ட அனைத்துக்கும் தேர்வுப்பட்டியல் வெளியிட்டு முடிந்த நிலையில் மீதமிருக்கும் ஆதிதிராவிடர் பள்ளிகளில் உள்ள 669 இடநிலை ஆசிரியர் தேர்வுப்பட்டியல் விரைவில் (இன்றிலிருந்து செவ்வாய் கிழமைக்குள்) வெளியிடப்படும் அதன் பின்பே இரண்டாம் தரப்பட்டியலுக்கான கலந்தாய்வுகள் நடைபெறும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்க்ன்றன