Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, October 7, 2014

    ஐகோர்ட் அதிரடி உத்தரவு: 80 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு 8 வாரத்திற்குள் ஊதிய மாற்றம்; ரூ.1,800 முதல் ரூ.9,900 வரை சம்பளம் உயர வாய்ப்பு

    தமிழகத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் 80 ஆயிரம் பேருக்கு 8 வாரத்திற்குள் ஊதிய மாற்றம் செய்ய வேண்டும்� என அனைத்து ஆசிரியர் சங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதன்மூலம் குறைந்தபட்சம், ரூ.1800 முதல் அதிகபட்சம் ரூ.9,900 வரை ஊதியம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


    இது குறித்து அனைத்து ஆசிரியர் சங்க பொது செயலாளர் கிப்சன் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 129 பேர் இடைநிலை ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இதில் 80 ஆயிரம் பேர் சாதாரண நிலை ஊதியம் (5200&20200&ஜிபி 2800) பெற்று வருகின்றனர்.

    தமிழ்நாட்டில் 1.1.2006 முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட 6வது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர் ஊதியம் 5200+2800 = 8000 என நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், மத்திய அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் 9300+4200=13500 என வழங்கப்பட்டுள்ளது.

    இதனால் ஏற்பட்ட பாதிப்பை நீக்கிட 2010ல் ஐஏஎஸ் அதிகாரி ராஜிவ் ரஞ்சன் தலைமையில் ஒரு நபர் குழுவும், 2012ல் அதிகாரி கிருஷ்ணன் தலைமையில் 3 நபர் குழுவும் அமைக்கப்பட்டது. ஆயினும், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து அனைத்து ஆசிரியர் சங்கம் பல்வேறு ஆதாரங்களை சேகரித்து ஊதிய மாற்றம் செய்ய வலியுறுத்தி, தமிழக நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட பலருக்கு மனு கொடுக்கப்பட்டது.

    அந்த ஆதாரங்கள் அடிப்படையில், இடைநிலை ஆசிரியர் ஊதியம் ரூ.9,300&34,800 தர ஊதியம் 4200 என மாற்றம் செய்திட உத்தரவிடக் கோரி கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் விசாரணைக்குப் பின்னர், தற்போது, 8 வாரத்திற்குள் ஊதியத்தில் உரிய மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிதித்துறை செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் தீர்ப்பு நகல் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த தீர்ப்பின்படி ஊதியம் மாற்றம் செய்யப்பட்டால், 80 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், ஓவிய ஆசிரியர்கள், தொழில் கல்வி ஆசிரியர்கள் பயன் பெறுவர். மேலும் 1999 முதல் 2005 வரை நியமனம் பெற்றவர்களுக்கு ரூ,1800ம், 2006 முதல் 2009 வரை நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு ரூ.3740ம், 1.6.2009க்குள் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு ரூ.9890ம் ஊதிய உயர்வு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கிப்சன் தெரிவித்துள்ளார்.


    6 comments:

    Unknown said...

    அரசாங்கமே இப்படி கொடுக்கவேண்டிய ஊதியத்தைத் தரமறுப்பது, தனியார்பள்ளிகளுக்கு முன்னுதாரணமாக அமைகிறது ....
    ஊழல்வாதிகள் கைக்குச் செல்லும் மக்களின் பணம் ஊழியர்களுக்குச் செல்லக்கூடாது என்பதில் அரசு முனைப்பாகச் செயல்படுவதுபோல் தெரிகிறது .....

    Unknown said...

    இன்று மதுரை உயர் நீதி மன்றத்தில் அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் மாநிலப் பொதுச் செயலாளர் திருவாளர் எம்.ராஜ்குமார் அவர்களால் தொடரப்பட்ட வழக்கு (ஆசிரியர் பயிற்றுநர்களை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியமர்த்துவது) விசாரனை நடைபெற்றது. வழக்கின் விசாரனை மீண்டும் வரும் ஆக்டோபர் மாதம் 21 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. By ARGTA (genuine) brte association tamilnadu m.o madurai b.o villupuram 9443378533

    Unknown said...

    Special Article : வெயிட்டேஜ் என்ற சமூக அநீதி!- பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு

    கல்வியியலில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு இடப்பட்ட சாபம்தான் வெயிட்டேஜ் முறை. சமூகத்தின் ஒரு பிரிவு மக்களே ஆசிரியர்களாக ஆக முடியும் என்ற ...
    http://www.pallikudam.com/2014/10/special-article_8.html?m=1

    Unknown said...

    All education news 24*7
    www.pallikudam.com

    SKGHSS VEDARANIAM said...

    Pg teachers than pavam patta jenmam

    Unknown said...

    இன்று மதுரை உயர் நீதி மன்றத்தில் அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் மாநிலப் பொதுச் செயலாளர் திருவாளர் எம்.ராஜ்குமார் அவர்களால் தொடரப்பட்ட வழக்கு (ஆசிரியர் பயிற்றுநர்களை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியமர்த்துவது) விசாரனை நடைபெற்றது. வழக்கின் விசாரனை மீண்டும் வரும் ஆக்டோபர் மாதம் 21 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. By ARGTA (genuine) brte association tamilnadu m.o madurai b.o villupuram 9443378533