Pages

Wednesday, October 1, 2014

நாய் கூண்டுக்குள் 6 வயது சிறுவன் அடைப்பு: தனியார் மழலையர் பள்ளியை மூடுவதற்கு கேரள அரசு உத்தரவு

சிறுவனை நாய் கூண்டுக்குள் அடைத்த விவகாரத்தில் தனியார் பள்ளியை மூடுவதற்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. புகாருக்கு உள்ளான தனியார் மழலையர் பள்ளியில் ஆய்வு செய்த மாநில கல்வித்துறை அதிகாரிகள், பள்ளியில் மாணவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்தனர். இதையடுத்து, அவர்கள் சமர்பித்த அறிக்கையை அடுத்து, அந்தப் பள்ளியை மூடுவதற்கு கேரள அரசு நேற்று உத்தரவிட்டது.

சிறுவனை நாய் கூண்டுக்குள் அடைத்த விவகராத்தில் கைது செய்யப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகி சசிகலாவுக்கு ஜாமின் கிடைத்துள்ளது. இதனிடையே, குழந்தைகள் நல ஆர்வலர்களும், பொதுமக்களும் பள்ளி நிர்வகத்தைக் கண்டித்தும், தண்டனைக் கொடுத்த ஆசிரியையை கைது செய்யக்கோரியும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவனந்தபுரத்தின் புறநகர் பகுதியான குடப்பனகுன்னு பத்திரப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் மழலையர் பள்ளியில் பயின்று வந்த 6 வயது சிறுவனை ஆசிரியை ஒருவர், நாய்கூண்டுக்கள் மூன்று மணி நேரம் அடைத்து வைத்தார். வகுப்பறையில் அருகில் இருந்த குழந்தையுடன் பேசியதால் இந்த தண்டனையை ஆசிரியை கொடுத்ததாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.