Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, October 12, 2014

    ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதென தகவல்

    ஆசிரியர் தகுதி தேர்வு 2013 தேர்வில்  60% தேர்ச்சி மதிப்பென்னாக வைத்திருந்தது பிறகு இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5% மதிப்பெண் தளர்வு கொடுத்தது அதன் மூலம் பலர் ஆசிரியர்களாக பனிநியமனம் பெற்றனர் பிறகு மதுரை உயர்நீதி மன்ற கிளை 5% மதிப்பெண் தளர்வுக்கு வழிவகை செய்யும் GO 25 அரசானையை ரத்து செய்தது. இதனை தமிழக அரசு சென்னை உயர் நீதி மன்றத்தில் இது வரை எந்த மேல்முறையீடும் செய்யாமல் இருந்தது இது குறித்து மதுரையை சேர்ந்த ஜெகன் என்பவர் தமிழக அரசிக்கு முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு ஒன்றை அளித்தார்.

    அதில் நான் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியுள்ளேன். தமிழக முதல்வர் அறிவித்த 5% மதிப்பெண் தளர்வு மூலம் வெற்றி பெற்றேன் இதன் மூலம் நான் அரசு உதவி பெறும் பள்ளியில் சேரலாம் என இருந்த நேரத்தில் மதுரை உயர் நீதிமன்ற கிளை இந்த அரசானையை ரத்து செய்தது இதனால் என் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரசானை ரத்து செய்ததை மேல் முறையிடு தமிழக அரசு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்

    தமிழக அரசு அளித்த பதில்: Reply given vide Govt Lr.No.32942/TRB/14-1, Dt.9.10.2014. The order of the Honble Madurai Bench of Madras High Court, dated 25.09.2014 has not yet been received by the Government. After the receipt of the order, the Government will take necessary steps on the feasibility of filing an appeal in the above case மேல் முறையீடு செய்யப்படும் என பதில் அளித்துள்ளது.

    மேல்முறையீடு செய்தால் தமிழக அரசுக்கு இந்த வழக்கில் வெற்றி கிடைக்கும் டெல்லியில் சுப்ரிம் கோர்ட் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த 5% மதிப்பெண் தளர்வு   அரசின் கொள்கை தாராளமாக வழங்கலாம் என கூறி இதற்கு முன் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளதால்  மீண்டும் 5% மதிப்பெண் தளர்வு உறுதியாகியுள்ளது.

    இரண்டாம் பட்டியல்

    இந்த வழக்கு வருவதால் இரண்டாம் பட்டியலில் 5% மதிப்பெண் தளர்வு சேர்த்து வரலாம் அதனால் சற்று தாமதம் ஆகலாம். இல்லை என்றால் அரசு நீதிமன்றத்தின் அனுமதியுடன் 5% மதிப்பெண் தளர்வு உடையவர்களையும் சேர்த்து பட்டியல் வெளியிட்டு வழக்கு முடிவதற்குள் கலந்தாய்வு நடத்தி வழக்கு முடிந்ததும் பணி நியமனம் செய்யப்படலாம் என தெளிவாக தெரிகிறது. இதன் மூலம் இரண்டாம் பட்டியல் உள்ள குழப்பம் தீர்ந்துள்ளது.

    1 comment:

    Unknown said...

    Thank u for appeal.Plz continue it.people will be benify (different ways)at least in privet school.