Pages

Monday, October 20, 2014

இந்திய விமானப்படையில் குரூப் - 3 பிரிவுக்கான ஆள்சேர்ப்பு முகாம்

இந்திய விமானப்படையில், குரூப் -3 பிரிவுக்கான ஆள்சேர்ப்பு முகாம், காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வரும் 27ல் நடைபெறுகிறது.

முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் சந்திரசேகர் வெளியிட்டுள்ள அறிக்கை: விமானப்படை ஆள்சேர்ப்பு முகாமில், 1995 பிப்., 1ல் இருந்து, 1998 ஜூன் 30க்குள் பிறந்த, திருமணம் ஆகாத ஆண்கள் பங்கேற்கலாம்.


வரும் 27ம் தேதி காலை 7.00 மணிக்கு எழுத்து தேர்வு, அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டும், மறுநாள் (28ம் தேதி) உடல்தகுதி மற்றும் நேர்காணல் நடக்கிறது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் அதற்கு இணையான படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தவர்கள் பங்கேற்கலாம்.

கடந்த ஆக., 27க்கு பின் எடுத்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஏழு, இருப்பிட சான்று, ஜாதிச்சான்று, கல்வி சான்றிதழ் அசல் மற்றும் நான்கு நகல்களுடன், ஆள் சேர்ப்பு முகாமுக்கு வர வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, www.indianairforce.nic.in என்ற இணைய தளத்தை பார்வையிடலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.