Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, October 13, 2014

    தமிழக அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% போனஸ்

    தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களான போக்குவரத்து, மின்வாரியம், கூட்டுறவு, சர்க்கரை ஆலை, நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் அரசு ரப்பர் கழக தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
    இதன் மூலம் 3 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தில் தகுதியுடைய ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸும், சென்னை குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றல் வாரிய சி,டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் சி,டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    No comments: