Pages

Thursday, October 23, 2014

'நெட்' தேர்வு அறிவிப்பு: விண்ணப்பிக்க நவ.15 கடைசி

கல்லூரி, பல்கலை உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கு தேசிய அளவில் நடத்தப்படும் "நெட்' (தேசிய தகுதித் தேர்வு) தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அறிவித்துள்ளது.


இதுவரை யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) நடத்தி வந்த இந்தத் தேர்வை, முதல்முறையாக 2014 டிசம்பரில் சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. இனி ஆண்டுக்கு இரு முறை இந்தத் தேர்வை சி.பி.எஸ்.இ.தான் நடத்தவுள்ளது. http://cbsenet.nic.in/cbsenet/Welcome.aspx என்ற இணையதளத்தில் துறைகள் என்ற பிரிவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வுக்கான விண்ணப்பத்தை ஆன்-லைனில் சமர்ப்பிக்க நவம்பர் 15 கடைசித் தேதியாகும். அறிவிக்கப்பட்ட வங்கிக் கிளைகளில் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த நவம்பர் 18 கடைசித் தேதியாகும். "ஆன்-லைன்' விண்ணப்பத்தை நவம்பர் 19-ஆம் தேதிக்குள் பிரதி எடுத்துக் கொள்ள வேண்டும். பிரதி எடுத்த விண்ணப்பத்தைச் சம்பந்தப்பட்ட ஒருங்கிணைப்பு மையத்தில் சமர்ப்பிக்க நவம்பர் 25 கடைசித் தேதியாகும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.