கடந்த செப்டம்பர், 25 முதல் அக்டோபர், 4ம் தேதி வரை எஸ்.எஸ்.எல்.ஸி., துணைத் தேர்வெழுதிய தனித் தேர்வர்களுக்கு மதிப்பெண்கள் சான்றிதழ்கள், தேர்வு எழுதிய மையங்களில் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனை நேரில் சென்று பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த தேர்வு முடிவுகள், இணையதளத்தில் வெளியிடப்படமாட்டாது. மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், அரசு தேர்வுத்துறை சேவை மையங்கள் மூலம் இன்று, (29ம் தேதி) வரை நேரில் சென்று மறு கூட்டல் கட்டணத்துடன் கூடுதலாக ஆன்லைன் பதிவு கட்டணமாக, 50 ரூபாயை செலுத்தி பதிவுசெய்து கொள்ள வேண்டும்.
மறு கூட்டலுக்கான கட்டணமாக, இருதாள் கொண்ட ஒவ்வொரு பாடத்திற்கும் 305 ரூபாயும், ஒரு தாள் கொண்ட ஒவ்வொரு பாடத்திற்கும் 205 ரூபாயும் செலுத்த வேண்டும்.
மார்ச், ஏப்ரல், 2015ல் நடைபெறவுள்ள எஸ்.எஸ். எல்.ஸி., பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், இன்று முதல் அடுத்த மாதம், 7ம் வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை, ஆன்லைனில் பதிவுசெய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.