Pages

Wednesday, October 29, 2014

கோடை பண்பலை 100.5 ல் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் ஒலிபதிவு நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் அகில இந்திய வானொலி நிலையமான  கோடை பண்பலை 100.5ல் காலை 6.30 மணி முதல் 7.00 மணிக்குள் நடைபெறும் பூந்தளிர் நேரம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான ஒலிபதிவு  நடைபெற்றது.
                                  
நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை மாணவி ரூபா வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.கோடை பண்பலை நிகழ்ச்சி அமைப்பாளர் பொன்.தனபாலன்,எட்வர்ட் கிங் ,சுப்பிரமணியன் ஆகியோர் மாணவ,மாணவியரிடம் அன்புடன் பேசி பூந்தளிர் நேரம் நிகழ்ச்சிக்கு பேட்டி எடுத்து ஒலிபதிவு செய்தனர்.மாணவ,மாணவியரும் வானொலியில் பேச போவதை  எண்ணி மகிழ்ச்சியாக பேசினார்கள். மாணவ,மாணவியர் பேசுவதற்கு ஆசிரியைகள் வாசுகி,கலாவல்லி,சாந்தி,முத்துலெட்சுமி ,முத்து மீனாள் ஆகியோர் பயற்சி அளித்தனர்.நிகழ்ச்சியில் கோடை பண்பலை நேயர் பேரவை காரைக்குடி காளிமுத்து,தேவகோட்டை முகமது இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியின் நிறைவாக மாணவர் கண்ணதாசன் நன்றி கூறினார். கோடை பண்பலை வானொலி 22 மாவட்டங்களில் இரண்டரை கோடி நேயர்களை சென்றடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.