கடந்த 01.09.2014 & 02.09.2014 நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வில் பங்கேற்ற அனைவருக்கும் பணி ஒப்புகை ஆணை வழங்கப்பட்டது.... அவர்கள் அனைவரையும் நாளை ( 04.09.2014 ) அனைத்து மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகத்தில் பணி நியமன ஆணை வழங்க இயக்குனர் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க தடைவிதித்தது. இதனால் நாளை பணி நியமன ஆணை வழங்கப்படாது.... ஆனால் பணி ஒப்புகை பெற்ற அனைவரும் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகதிற்கு செல்லவும். அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நாளை நடைபெறும்.... எனவே அனைவரும் கலந்தாய்வின் போது கூறியபடி அணைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் செல்லவும்.... இயக்குனரின் மறுஉத்தரவு வரும் வரை இந்நிலை தொடரும்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.