Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, September 8, 2014

    ஆசிரியர் தகுதித் தேர்வு போராட்டம்: கேள்வியும் பதிலும்?

    மாதிரி கேள்விகள்-

    1). குமார், திருநெல்வேலி மாவட்டம் - டெட் வெயிட்டேஜ் அடிப்படையிலான பணி நியமனத்தை எதிர்த்து கடந்த ஒரு வருடமாக ஏன் போராடவில்லை. இப்போது மட்டும் ஏன் போராட்டம்? போராடுபவர்களின் பெயர்கள் பட்டியலில் வரவில்லை என்பதால் தானே?

    2).  சசி, தேனி மாவட்டம் - டெட் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் என்றால் தங்கள் குழுவில் இருக்கும் 90 மதிப்பெண்கள் எடுத்த பலருக்கும் பணி கிடைக்காமல் போகலாமே? அதற்கு உங்கள் பதில் என்ன?


    3) ரவி, திருவள்ளுர் மாவட்டம் - நடந்து முடிந்த கலந்தாய்வில், பங்கேற்றவர்களின் பணி ஆணையை பறித்து, தங்களுக்கு பணி ஆணையை வழங்க கோருவது நியாயம் தானா?

    4) விமல் மணி, திருவண்ணாமலை மாவட்டம் - இது வரை பல போட்டித் தேர்வு எழுதி எதிலுமே வெற்றி பெறவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

    5) படிக்கவேண்டிய காலத்தில் சரியாக படிக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

    6) உங்களுக்குள் 10 வருடங்களுக்கும் மேற்பட்ட பணி அனுபவம் இருக்கும்போது டெட் தேர்வில் 145 மதிப்பெண்ணுக்கும் மேல் பெற்றிருக்கலாமே? ஏன் பெறவில்லை?

    7) தற்போது நடந்த கலந்தாய்வில் கூட 10 வருடங்களுக்கு முன்னர் படித்த பலரும் கலந்துகொண்டு பணி இடத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களுக்கு மட்டும் இந்த வெயிட்டேஜ் முறையால் பாதிப்பு ஏற்படவில்லையா? என்ன?

    8)  இதே வெயிட்டேஜ் முறையில் ஒருவேளை தங்களுக்கு மட்டும் இறுதி பட்டியலில் இடம் கிடைத்திருந்தால், அப்போதும் வெயிட்டேஜ் முறையை நீக்கக்கோரி போராடி இருப்பீர்களா?

    9)  கோபால் - டெட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் மற்றொரு இளங்கலை டி.ஆர்.பி. தேர்வு வைத்து அதன் மூலம் பணி நியமனம் நடைபெறுவதாக இருந்தால் அதை ஒத்துக்கொள்வீர்களா?

    10) பிரிய தர்ஷினி - டெட் தேர்வு என்பது இர ண்டு வருடமாகத் தான் நடக்கிறது, அதற்குள் ஒரு நல்ல அரசுக்கு விரைவான தெளிவான நடைமுறை சாத்தியம் என கருதுகிறீர்களா?

    11)   கோபால கிருஷ்ணன் - ஒரு வேளை நீதிமன்றம் ஸ்டே ஆர்டரை நீக்கி பணி நியமனம் நடைபெற்று விட்டால், தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை எப்படி இருக்கும்?

    12) டெட் மதிப்பெண் மட்டுமே தகுதியான ஆசிரியர் தான் என நிர்ணயிக்க போதுமானதா?

    13)  10 வருடங்களுக்கு முன்னரும் 12 ஆம் வகுப்பில் 1000 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இருக்கிறார்களே? அதனால் 10 வருடங்களுக்கு முன் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை என்பது தவறான கூற்று தானே?

    14)  உண்மையில் உங்கள் போராட்டம் வெயிட்டேஜ் முறைக்கு எதிரானதா? அல்லது இடஒதுக்கீடு முறைக்கு எதிரானதா?

    15) சுருளிவேல் - எந்த காரணங்களுக்குாக போராடுகிறீர்கள் என உங்கள் கோரிக்கைகளை முழுமையாக தெரிவிக்க இயலுமா?

    16)  ராஜ்குமார் - பள்ளி , கல்லூரிகளின் சீரான தேர்வு முறையின் மூலம் பெறும் மதிப்பெண்களைப் போலல்லாமல் TEt போன்ற தேர்வுகளில் 15 முதல் 20 சதவீதம்வரைLUCK MARK பெறலாம் என்பது அறிவியல் பூர்வமான உண்மை. அவ்வாறு உள்ளபோது மதிப்பெண்ணை மட்டும் கணக்கில் கொண்டு பணிநியமனம் கோருவது தவறு இல்லையா?

    17) கௌதம், வேலூர் மாவட்டம் - டெட் தேர்வு என அல்லாமல், எந்த தேர்விலுமே சராசரி மாணவர்கள் வெற்றி பெற்று வேலைக்கு செல்வது கடினம் தானே?

    18) எந்த முறையில் பணி நியமனம் நடைபெற்றாலும் 15000 ஆசிரியர்களுக்கு மேல் மீதமிருப்பவர்களுக்கு பாதிப்பு தான். அப்படியிருக்க அவர்களுக்கு தங்கள் பதில் என்ன?

    19) ஆரோக்கியராஜ் - பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் அடுத்த தேர்வில் முன்னுரிமை கேட்பது நியாயமா? அதை விடுத்து வெயிட்டேஜ் ரத்து செய்ய கோரி போராட்டம் என்ற பெயரில் அரசு பணிகளை முடக்கி ஆசிரியர்களையும் மாணவர்களையும் பாதிப்புக்குள்ளாக்குவது நியாயமா?

    20) கார்த்திக் விசாலம் - போராட்ட களத்தில் இருப்பதால் உங்களுக்கு ஆதரவாக எதிர்கட்சிகள் செயல்படுகின்றன. இதனால் ஒருவேளை எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அப்போதும் எங்களுக்காக நீங்கள் போராடுவீர்களா?

    21) மனசாட்சிப்படி கூறுங்கள் - அரசை நிர்பந்திப்பதற்காக வருங்கால ஆசிரியர்களாகிய நீங்கள் ”தற்கொலை முயற்சி” போன்றவற்றில் ஈடுபட்டு மிரட்டுவது தவறு என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

    22) வெயிட்டேஜ் முறை சரி எனவும், கூடுதல் பணியிடங்கள் உருவாக்கி தற்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் எனவும் ஒருவேளை நீதிமன்றத் தீர்ப்பு வந்தால், அப்போதும் எதிர்கால ஆசிரிய சமூகத்திற்காக, வெயிட்டேஜ் முறையை எதிர்த்து போராடுவீர்களா? அல்லது தங்களுக்கு பணி நியமனம் கிடைத்த வரை போதும் என போராட்டத்தை நிறுத்தி விடுவீர்களா?

    23) தற்போது தேர்வு பெற்று பணி இடத்தை தேர்வு செய்திருப்பவர்களுக்கும் பாதிப்பில்லாமல், தங்களுக்கும் பணி கிடைக்க தாங்கள் முன் வைக்கும் தீர்வு தான் என்ன?


            இதுவரை பதிவிடப்பட்ட கேள்விகளின் சாராம்சம் இங்கு பதிவிடப்பட்டுள்ளது. நாளை போராட்டக்குழுவிடமிருந்து இக்கேள்விகளுக்கான பதில்கள் பெற்று பதிவிடப்படும்.


    நன்றி!

    4 comments:

    Unknown said...

    porattakrarkal kuruvathu 10 andukalukku munbu 1200kku 1000 mark than peramudinthathu aeppothu 1198 varai perukirarkal andru aanal avarkal yarum bsc., ba., padipathilai 600 - 900 mark yaduththavarkal mattume padikirarkal ethey nilai than 10 andukalukku aypadiththavarkalukkum erunthathu anave porattakararkal mun vaikkum korikkai poyyanathu suyanalamanathu

    Unknown said...

    Thats good...sir ...

    Unknown said...

    oru matham karthirunthu athu nadakapogum pothu ippadi nadanthuvitathe ena neengal suyanalamaga sinthanai seyyum pothu avargal february matham certificate verification mudithu posting kidaikkum endru kanavu kandathu ellam poche ena vethanai paduvathai kotchai padutha muyarchi seyya vendam.

    Unknown said...

    few month velai kidaikkum ena wait panni atharku pala thadaigal varuvathai virumbamal selfish aga pala questions ketkum ungalaipola Avargalum February month certificate verification mudithu pala mathamaga kanavu kandu athu collapse agum pothu avargalukku eppadi irukkum? Think Neutrally . They are already passed and done CV wait after for six months. ungal velaya avanga thatti parikala.