விடாமுயற்சியுடன் செயல்பட்டு, தோல்வியை தோல்வியடையச் செய்து, வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும், என, மாணவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அறிவுரை கூறினார். திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் மெட்ரிக் பள்ளியில், மாணவர்களுடனான கலந்துரையாடல் நடந்தது.
இதில் அப்துல் கலாம் பேசியதாவது: அறிவு அற்றங் காக்கும் கருவி என்ற திருக்குறள் எனக்கு மிகவும் பிடித்ததாகும். அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவி. எந்த பகைவராலும் அறிவை அழிக்க முடியாது; அறிவு என்பது கற்பனை சக்தி, மனத்தூய்மை உள்ள உறுதி ஆகிய மூன்றும் சேர்ந்ததுதான்.
கற்றல், கற்பனை சக்தியை வளர்க்கிறது; கற்பனை சக்தி, சிந்திக்கும் திறனை தூண்டுகிறது; சிந்தனை, அறிவை வளர்க்கிறது. எனவே, அறிவு உன்னை மகானாக்கும். உள்ளத்தில் உறுதி இருந்தால், முடியாததையும் கண்டு பிடிக்கலாம்; சவால்களை தோற்கடித்து, வெற்றி பெறலாம். எனவே, விடாமுயற்சியால், தோல்வியை தோல்வியடையச் செய்து, வாழ்க்கையில் வெற்றி பெற்று, நாட்டை வளமான நாடாக்குவேன் என, உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.
நமது வாழ்க்கையில் முன்னேற, நான்கு முக்கிய விஷயங்கள் தேவை. முதலில், மிகப்பெரிய லட்சியம் வேண்டும்; சிறு லட்சியம் குற்றமாகும். அடுத்து, அறிவை தேடித் தேடிப் பெற வேண்டும். மூன்றாவது, கடுமையாக உழைக்க வேண்டும். நான்காவது, விடாமுயற்சி வேண்டும். இந்த நான்கும் இருந்தால், எண்ணிய லட்சியத்தை அடையலாம். இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.