Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, September 6, 2014

    ஆசிரியர் பணிக்கு போராடுபவர்களுடன் அரசு பேச்சு நடத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

    ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி முடித்து ஆசிரியர் பணி நியமனத்துக்காக போராட்டத்தில் ஈடுபடுபவர்களுடன் தமிழக அரசு பேச்சு நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.


    சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
    ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்து ஆசிரியர் பணி நியமன ஆணைக்காக காத்திருப்பவர்கள் கடந்த ஒரு வாரமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்த இந்த இளைஞர்களில் பெரும் பகுதியினர் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள். முதல் தலைமுறை அரசு வேலைக்காக முயற்சிப்பவர்கள். இவர்களுடன் பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

    தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஒன்றியம், செல்வபுரம் வருவாய் கிராமத்தில் 215 விவசாயிகளுக்குச் சொந்தமான 915 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் நில மோசடி கும்பல் பத்திரப் பதிவு செய்துள்ளது. இதற்கு எதிராக போராடும் மக்களுக்கு கருங்குளம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கி வருகிறார். இதனால் அவருக்கு நிலப் பறிப்பு கும்பல் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறது. இதுகுறித்து காவல் துறையிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. மாரியப்பனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

    No comments: