Pages

Wednesday, September 17, 2014

அபராதத்துடன் வருமான வரி செலுத்த வேண்டும்; அரசு ஊழியர்களுக்கு 'நோட்டீஸ்'

அரசுப் பணியாளர்களிடம் பிடித்தம் செய்த தொகையை, முறையாக செலுத்தாததால், அபராதத்துடன் வருமான வரியை செலுத்த வேண்டும்' என, வருமான வரித்துறை 'நோட்டீஸ்' அனுப்புவதால், அரசுப்பணியாளர்கள் புலம்பி வருகின்றனர்.ஆண்டுக்கு, 2 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுவோர், வருமான வரி செலுத்த வேண்டும். இந்த தொகையை, மோடி தலைமையிலான புதிய அரசு, 2.5 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது.

முந்தைய ஆண்டுக்கான வருமான வரி செலுத்த, இந்த ஆண்டு ஜூலையுடன் கால அவகாசம் முடிந்தது. தனி நபர் முதல், நிறுவனங்கள் வரை, மாதச் சம்பளம் பெறுவோரும் வருமான வரிக்கான படிவங்களை தாக்கல் செய்தனர். அரசு துறைகளில் பணியோற்றுவோருக்கு சம்பளத்திலேயே, வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டது.

ஆனால், பிடித்தம் செய்யப்பட்ட பணம், மாநில கருவூலக் கணக்கு அலுவலகத்தில் இருந்து, முறையாக வருமான வரித்துறைக்கு சென்று சேரவில்லை.வருமான வரிக்கான படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்தோருக்கு, 'உங்கள் கணக்கில், வருமான வரி செலுத்தப்படவில்லை; அபராதத்துடன், இவ்வளவு தொகை செலுத்த வேண்டும்' என, வருமான வரித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பி வருகிறது.
வருவாய் துறை உள்ளிட்ட, பல்வேறு துறைகளின் அரசு ஊழியர்களுக்கும், இந்த, 'நோட்டீஸ்' வந்த வண்ணம் உள்ளது. 'சம்பளத்தில் பிடித்தம் செய்த தொகையை, அரசு செலுத்தாததற்கு நாங்கள் ஏன், அபராதம் கட்ட வேண்டும்' என, அரசு பணியாளர்கள் புலம்புகின்றனர்.

'எங்கள் சம்பளத்தில், வருமான வரியை அரசு பிடித்தம் செய்து விட்டது. அரசு தான் வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டும்; நாங்கள், அபராதம் செலுத்த வாய்ப்பில்லை' என, 'நோட்டீஸ்' கிடைத்தோர், பதில் அனுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து, கருவூலத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வருமான வரி பிடித்தம் செய்த தொகை, ஒவ்வொரு பகுதியாக, வருமான வரித்துறைக்கு செலுத்தப்பட்டு வருகிறது. ஊழியர்கள் அச்சம் அடையத் தேவையில்லை' என்றனர்.'பிடித்தம் செய்த பணத்தை, முறையாக செலுத்தி இருந்தால், ஊழியர்களை பரிதவிக்க விடாமல் தவிர்த்திருக்க முடியும். வரும் ஆண்டுகளிலாவது அரசு, இதுபோன்ற சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என, அரசுப்பணியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்

1 comment:

  1. எங்கள் கருத்துக்களை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி gurugulam.com

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.