Pages

Thursday, September 18, 2014

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பொதுச் செயலாளர் மரியாதை நிமித்தமாக பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பொதுச் செயலாளர் திரு.இரா.தாஸ் மரியாதை நிமித்தமாக பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்து கீழ்காணும் கோரிக்கைகளை வைத்தார்.

1) உயர்க்கல்வி மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு பின்னேற்பு அனுமதி அளிக்க வேண்டும்.


2) 2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட இ.நி.ஆ / பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமன தேதியை கணக்கில் கொண்டு தேர்வுநிலை வழங்க வேண்டும். 

3) ஊராட்சி ஒன்றியம் / நிதிநாடும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அதே பள்ளியில் பி.எட்., பயிற்சி பெற அனுமதிக்க வேண்டும்.

4)காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் / தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு மீண்டும் ஒரு கலந்தாய்வு நடத்த வேண்டும்.

5)அரசாணை எண்.336ன் படி 1991/92ல் ரூ.800ல் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு இளையோர் / மூத்தோர் குறைபாடுகள் சரி செய்ய வேண்டும்.

6)TPFஐ GPFஆக மாற்ற வேண்டும்.

7)AEEO காலியாக உள்ள அலுவலக பணியிடங்களை நிரப்புவது சார்பாக நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்.

8) நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு கணக்கை சரிசெய்து கணக்கீட்டுத்தாள் வழங்கவும், இறந்த மற்றும் ஓய்வுபெற்றவர்களுக்கு உடனடியாக உரிய பலன்களை வழங்க வேண்டும் என கோரிக்கைகளை வைத்து நிவர்த்தி செய்ய வலியுறுத்தப்பட்டது.

மேலும் மேற்காணும் கோரிக்கைகளை பரிசீலினை செய்து உரிய ஆணை பிறப்பிப்பதாக தொடக்கக்கல்வி இயக்குநர் உறுதியளித்துள்ளார் எனவும் தெரிவித்தார். 

2 comments:

  1. நல்ல விசயம். வெறும் போராட்டங்கள் அறிவிப்பதை விட இவ்வாறு வலியுறுத்துவது பலன் அளிக்கலாம்

    ReplyDelete
  2. நல்ல விஷயம். வெறும் போராட்டங்கள் அறிவிப்பதை விட இந்த மாதிரி சந்திப்புகள் கொஞ்சம் பயன் தரலாம்

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.