ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள,மதிப்பெண் சலுகை செல்லாது என உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கியுள்ளதை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது. இந்தத் தீர்ப்பு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
தேர்ச்சி மதிப்பெண்ணைக் குறைப்பதால் கல்வியின் தரம் குறைந்துவிடும் என்ற வாதம் ஏற்றுக் கொள்ளக் கூடியது இல்லை.
ஆசிரியர் தகுதித் தேர்வை அறிமுகம் செய்வதற்கு முன்பாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மிகச் சிறந்த மாணவர்களை உருவாக்கியுள்ளனர்.
தகுதித் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்களை நிர்ணயம் செய்ய மாநில அரசுகளுக்குத் தேசிய ஆசிரியர் கல்விக் குழு அதிகாரம் வழங்கியிருக்கிறது.
எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண் செல்லாது என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். மேலும் தேவையற்ற குழப்பங்களையும், முறைகேடுகளையும் தவிர்க்க தகுதிகாண் மதிப்பெண் முறையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
ஏமாற்றப்பட்ட 652 கணினி ஆசிரியர்கள்
ReplyDeleteதற்போது TET- தேர்வில் இட ஒதுக்கீட்டில் 5% மதிப்பெண் தளர்வு அளித்து பணிநியமனம் வழங்கப்படிருக்கிறது. இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை 5% மதிப்பெண் தளர்வு அளித்தது தவறு என்று அந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த 5% மதிப்பெண் தளர்வால் தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டாம் என்றும் இனிவரும் காலங்களில் இந்த 5% மதிப்பெண் வழங்கக்கூடாது என்றும் 5% மதிப்பெண் தளர்வுக்கான அரசாணை ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டுள்ளது.
ஆனால் 652 கணினி ஆசிரியர்கள் விஷயத்தில் TRB நடத்திய தேர்வில் 50% மதிப்பெண் எடுத்தால் அவர்களுக்கு பணிவழங்கப்படும் என்று அரசு உத்தரவிட்டது. தேர்வு நடந்து முடிந்த பின்பு அரசு 50% இலக்கை மாற்றி 15% தளர்வு கொடுத்து 35% எடுத்தால் போதுமானது என்று கருதி அரசு தெரிவித்தது. இதனடிப்படையில் TRB தேர்வு முடிவை வெளியிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் தன் தீர்ப்பை வெளியிட்டது.
தீர்ப்பில் 35% சதவீதமாக அரசு குறைத்தது தவறு. இதனால் 35% மேலும் 50% குறைவாகவும் மதிப்பெண் எடுத்தவர்கள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் 652 கணினி ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
TET-ல் 5% தளர்வு அளித்தது தவறு என்றும், கணினி ஆசிரியர்களுக்கான தேர்வில் 50% என்று உள்ளதை 15% தளர்வு 35% ஆக குறைத்தது அளித்தது தவறு என்று நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் இந்த முறை மட்டும் 5% தளர்வால் தேர்வானவர்களை பணியிலிருந்து நீக்க வேண்டாம் என்று கூறியுள்ளது. கணினி ஆசிரியர்கள் தேர்வு விஷயத்தில் 50% என்று உள்ளதை 15% தளர்வு அளித்து 35% மதிப்பெண் பெற்று தேர்வானவர்களை பணியிலிருந்து நீக்க வேண்டாம் என்று நீதிமன்றம் கூறவில்லை,
மாறாக 50%-திற்கு குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் மற்றும் 35% மேல் மதிப்பெண் பெற்றவர்கள் பணியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
TET-ல் 5% மதிப்பெண் குறைவால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஒரு நியாயம், இதே TRB நடத்திய வேதர்வில் 15% மதிப்பெண் தளர்வால் தேர்வு செய்யப்பட்ட கணினி ஆசிரியர்களுக்கு ஒரு நியாயம். நீதி எங்கே இருக்கின்றது.
தமிழக அரசும் பாதிக்கப்பட்ட கணினி ஆசிரியர்களுக்காக குரல் கொடுக்கவில்லை.
TET-ல் 5% மதிப்பெண் குறைவால் தேர்வு செய்யப்பட்டவர்கள் இன்று தான்(26.09.14) பணியில் சேர உள்ளனர். ஆனால் கணினி ஆசிரியர்கள் தேர்வில் 15% மதிப்பெண் தளர்வால் தேர்வு செய்யப்பட்ட கணினி ஆசிரியர்கள் பணியில் சேர்ந்து 4 ஆண்டுகள் 6 மாதங்கள் முறையான ஊதியத்தில் பணிபுரிந்துள்ளனர். இந்நிலையில் இவ்ரகளை (652 கணினி ஆசிரியர்களை) பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
652 கணினி ஆசிரியர்கள் ஏமாற்றப்பட்டனர். தற்போது இவர்களின் நிலை ----------------(டேஷ்).