ஆசிரியர் தேர்வு பட்டியலில் முறைகேடு செய்து இடைத்தரகர்களாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை கலெக்டர் சுந்தரவல்லியிடம் பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் மனு அளித்துள்ளனர். மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: பட்டதாரி ஆசிரியர் பணி இடத்தில் வெயிட்டேஜ் முறை நடைமுறைப்படுத்தபட்டது குறித்து தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பலர் குறைந்த மதிப்பெண் பெற்று தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
பட்டதாரி ஆசிரியர் பணி இடத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வந்தது. ஆசிரியர் தேர்வு ஆணையத்தில் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்ற கோவையை சேர்ந்த இளங்கோவன் என்பவர் இதில் இடைத்தரகராக செயல்பட்டு வருகிறார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஆசிரியர் தகுதித் தேர்வு பயிற்சி மையம் நடத்தி வரும் கலைநேசன் என்பவரும், இவருடன் சேர்ந்து கொண்டு ஆசிரியர் பணி வாங்கி தருகிறேன் என பலரிடம் யி80 லட்சத்துக்கும் மேல் பணம் வசூலித்துள்ளனர். இவர்கள் இருவரும் சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் மாற்று பெயரில் விடுதி எடுத்து தங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இளங்கோவனை கண்டுபிடித்தால் மேலும் பல இடைத்தரகர்களின் பெயர் வெளிவரும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.