Pages

Thursday, September 25, 2014

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணை விநியோகம்!

இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக தேர்வானோருக்கு பணிநியமன ஆணை இன்று பிற்பகல் முதல் வழங்கப்படுகிறது.


கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு நடைபெற்றது.


இதில் பங்கேற்று பணியிடம் தேர்வு செய்தவர்களுக்கு இன்று (25ஆம் தேதி) பிற்பகல் முதல் பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. இந்த பணி ஆணையை சம்பந்தப்பட்ட கலந்தாய்வு மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.


இதையடுத்து, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமன ஆணையைப் பெற்று உடனடியாக பணியில் சேருமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

SOURCE : JAYA NEWS




No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.