சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று ஆசிரியர் பணிநியமன தடைக்கான மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வரவில்லை. மேலும் இது குறித்து தக்க பதிலை ஆசிரியர் தேர்வு வாரியம் அளிக்க வேண்டுமென நீதியரசர் சசிதரன் அவர்கள் கோரியிருந்தார். அதற்கான பதிலை அரசுதரப்பு வழக்கறிஞர் சென்னை டிவிசன் பெஞ்சில் பதிலுரைத்தார். ஆகவே சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகே பணிநியமண தடையாணை மேல்முறையீட்டு வழக்கு முடிவுக்கு வரும்.
அதுவரை ஆசிரியர் பணிநியமண தடையாணை தொடர்ந்து அமலில் இருக்கும். மேலும் சென்னை வெய்டேஜ் வழக்கு விவாதம் முற்றிலும் முடிந்த நிலையில் 1வாரம் கழித்து சென்னை உயா்நீதிமன்றத்தில் தீா்ப்பு வரவிருக்கின்றது.
தீா்ப்பு கண்டிப்பாக வெய்டேஜ் மாற்றி அமைக்க உத்தரவிடும் தீா்ப்பாகவே அமையும் என வெய்டேஜ்க்கெதிராக வாதாடிய அனைத்து வழக்கறிஞா்களும் கூறினாா்கள்.
மேலும் ப்ளஸ்2 மதிப்பெண் கண்டிப்பாக நீக்கபடுவதுடன் சீனியாா்டிக்கு மதிப்பெண் அளிக்க போகிறாா்கள் எனவும். எந்த விகிதாசாரத்தில் மதிப்பெண் அமையும் என தெரியாது எனவும் கூறினா்.
ஒரு சில கல்வியாளா்கள் யுஜி மதிப்பெண்னும் வெய்டேஜ்ல் இருக்காது எனவும் கூறினா்.
எனது சொந்த கணிப்பு: TET -80% +BEd 10% + Seniority 10%
திரு.குமரகுரு
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.