Pages

Sunday, September 28, 2014

சிறையில் ஜெயலலிதாவை சந்திக்க ஷீலா பாலகிருஷ்ணனுக்கு அனுமதியில்லை

சிறையில் ஜெயலலிதாவை சந்திக்க ஷீலா பாலகிருஷ்ணனுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனிக்கோர்ட்டு ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறியது. பின்னர் ஜெயலலிதாவும் சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் தானாகவே முதல்-அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ.பதவியையும் இழந்து விட்டார். ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. 


அத்துடன் அவர்களுக்கு விதிக்கப்படும் சிறை தண்டனை காலமும் சேர்த்து கணக்கிடப்படும். ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதால் அவர் மொத்தம் 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. இந்நிலையில் இன்று சிறையில் ஜெயலலிதாவை சந்திக்க தமிழக அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் காலை பெங்களூர் புறப்பட்டு சென்றுள்ளனர். சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதாவை சந்திக்க சென்றனர். அவர்கள் அடுத்த முதல்-அமைச்சர் மற்றும் அரசு நடவடிக்கை குறித்து ஜெயலலிதாவிடம் ஆலோசனை நடத்துவார்கள் என்று கூறப்பட்டது. 

ஆனால் அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதாவை சந்திக்க ஷீலா பாலகிருஷ்ணனுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. . விடுமுறை நாள் என்பதால் இதுவரை ஜெயலலிதாவை சந்திக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அக்ரஹாரா சிறைமுன் கடந்த 4 மணி நேரமாக ஷீலா பாலகிருஷ்ணன் காத்திருக்கிறார். ஷீலா பாலகிருஷ்ணனனுடன் சென்ற வெங்கடராமன் உள்ளிட்ட அதிகாரிகளும் காத்திருக்கின்றனர். ஜெயலலிதாவை சந்திக்க சிறப்பு அனுமதி கேட்டு சிறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவை சந்திக்க சென்ற அமைச்சர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.