Pages

Monday, September 1, 2014

அரசு மேல் நிலைப்பள்ளி கழிவறையில் மாணவி தீக்குளித்து தற்கொலை

பேரணாம்பட்டு பாகர் உசேன் வீதியை சேர்ந்த கண்ணபிரான் மகள் ஹரிணி. இவர் அங்குள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் 6–ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை பள்ளி கழிவறை பகுதியில் மாணவி ஹரிணி உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவியை கண்ட ஆசிரியார்கள் மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி ஹரிணி உயிரிழந்தார்.

தகவலறிந்த பேரணாம்பட்டு போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவியின் தாய் இறந்து விட்டதாகவும், இதனால் இவரது தந்தை கண்ணபிரான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது.மேலும் மாணவி ஹரிணி சிறிய கூல்டிரிங்ஸ் பாட்டிலில் மண்ணெண்ணை எடுத்து வந்து பள்ளி கழிவறையில் தீக்குளித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் மாணவி தற்கொலைக்கு காரணம் தெரியவில்லை. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.