Pages

Sunday, September 21, 2014

தமிழகம் முழுவதும் ஆன்லைன் வழி சம்பள பட்டியல் சமர்பிப்பு முறை

தமிழ் நாட்டில் தற்போது வரை உள்ள சம்பள பட்டியல் சமர்பிப்பு முறை (இ.சி.எஸ்) விரைவில் ஆன்லைன் வழியாக நடைபெற உள்ளது. இப்புதிய Online Epayroll முறையில் ஒவ்வொரு சம்பளம் வழங்கும் அலுவலருக்கும் 2 பாஸ்வேர்ட்கள் வழங்கப்படும்.


இதன்படி சம்பளபட்டியலை தயாரிக்கும் இளநிலை உதவியாளருக்கு ஒரு பாஸ்வேர்டும், அதனை சரிபார்த்து ஒப்புதல் வழங்கி கருவூலத்தில் சமர்பிக்க Pay Drawing Officer க்கு ஒரு பாஸ்வேர்ட்டும் வழங்கப்படும். இதன் மூலம் சம்பள பட்டியலை ஆன்லைனில் சமர்பித்துவிட்டு, எம்.டி.சி மற்றும் இதர சிறப்பு ஆவணங்களை மட்டும் (சம்பள பட்டியலுடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்) கருவூலத்தில் சமர்பிக்க வேண்டியதாக இருக்கும். இப்புதிய முறை தற்போது ஊரக வளர்ச்சித்துறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஓரிரு மாதங்களில் கல்வித்துறை உட்பட இதர துறைகளிலும் அமல்படுத்தப்பட உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.