1. முதலில் உங்கள் பாடதிட்டத்தை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். அது கல்வி சம்பந்தப்பட்ட வெப்சைட்டில் இருக்கும்.
2. அந்த பாடத்திட்டத்திற்கு ஏற்ற புத்தகங்களை வாங்குங்கள். நல்ல புத்தகங்கள் உங்கள் மாவட்ட தலைமை நூலகத்தில் உள்ளன. அவற்றை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
3. பாடத்திட்டம் 10 யூனிட்களை கொண்டு இருந்தால் அதற்கேற்ப நோட்டு புத்தங்களை வாங்கி கொள்ளுங்கள்.
4. ஒரு யூனிட்டில் இருக்கும் முதல் தலைப்பை நீங்கள் வைத்து இருக்கும் புத்தகத்தில் தேடி படியுங்கள். படித்ததை நீங்கள் போட்ட யூனிட் அடிப்படையிலான நோட்டில் குறிப்பு எடுத்து கொள்ளுங்கள். பின்னர் அதே தலைப்பை இணையதளத்தில் தேடுங்கள்.
5. மேற்கண்டவாறு அனைத்து யூனிட்களையும் படியுங்கள்.
6. எஜுகேஷனல் சைக்காலஜியை பொறுத்தவரை உங்கள் பி.எட்., புத்தகங்களே போதுமானது.
7. பொது அறிவு பற்றிய 10 வினாக்களுக்கு உரிய விடை அளிக்க இப்போதிலிருந்தே பத்திரிக்கைகளை படிக்க தொடங்குங்கள்.
இது ஆரம்பம் மட்டுமே. நீங்கள் படிக்க தொடங்குங்கள்.
செய்தி பகிர்வு : திரு. ராப் ராகேஷ்
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.