தமிழ்நாடு தொழில் சார்நிலைப் பணியில், உதவிப் பொறியாளர்(தொழில்கள்) பதவியில், 40 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, கடந்தாண்டு நடைபெற்று முடிந்தது.
இத்தேர்வில் தேறியவர்களுக்கான, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 200 பேரின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் www.tnpsc.gov.in என்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்டவர்கள், தாங்கள் அளித்துள்ள தகவல்களுக்கு ஏற்ப, தங்களின் சான்றிதழ் நகல்களை, அக்டோபர் 6ம் தேதிக்குள் பதிவஞ்சல் அல்லது பதிவேற்றம் மூலமாக அனுப்ப வேண்டும். குறிப்பிட்ட தேதியைக் கடந்து கிடைக்கப்பெறும் ஆவணங்கள் நிராகரிக்கப்படும்.
No comments:
Post a Comment