Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, September 16, 2014

    ஏழை மாணவர் கல்வி கற்க தள்ளாத வயதிலும் உதவும் தம்பதியர்

    சென்னை சின்மயா நகரில் வசிக்கும், மத்திய அரசின் ஓய்வு பெற்ற அதிகாரியான சுப்பிரமணியன், 72, ஓய்வுபெறும் அதிகாரிகளுக்கு, மூன்று வகையான வழிகாட்டல்களை வழங்குகிறார். ''ஒன்று, ஓய்வு பெற்றவுடன் சொந்த ஊருக்குச் செல்லுங்கள்; இரண்டு, சொந்த பந்தங்களை இணைப்பதில் அக்கறை காட்டுங்கள்; மூன்று, நீங்கள் படித்த பள்ளிக்கு உங்களால் முடிந்த ஏதாவது ஒரு உதவியை செய்யுங்கள்,''இதுபோன்ற அறிவுரைகள் வழங்க இவருக்கு, அதிக தகுதி உள்ளது.காரணம் என்னவெனில், சென்னை, திருவண்ணாமலை, வேலுார் என, ஊர் ஊராக அலைந்து திரிந்து, அரசுப் பள்ளிகளில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும், மாணவர்களின் கல்விக்காக, தனது ஓய்வூதியத்தின் ஒரு பகுதியை, தொடர்ந்து செலவிட்டு வருகிறார், சுப்பிரமணியன்.
    திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்துாரில் உள்ள மூன்று தொடக்கப் பள்ளிகளுக்கும், கீழ் பெண்ணாத்துார் கிழக்கு, வடக்கு ஆகிய பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளி, அதேபகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளி, வணக்கம்பாடி, குருவிமலை ஆகிய பகுதிகளில் உள்ள தொடக்கப் பள்ளி, சென்னையில் கோயம்பேடு, விருகம்பாக்கம், அரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தனது ஓய்வூதியத்தை செலவிட்டு வருகிறார். தனது ஓய்வூதியத்தில், மாதத்தோறும், 5,000 ரூபாய் ஒதுக்கி, அதில், உலக வரைபடம், திருக்குறள், பாரதியார் கவிதைகள், காமராஜர் வாழ்க்கை வரலாறு, லிப்கோ ஆங்கில பேரகராதி, நீதி நெறி நுால்கள், பென்சில், ஸ்கேல், ரப்பர், பேனா உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறார்.அதுவுமின்றி இந்தப் பள்ளிகளுக்குத் தேவையான பொருட்களை வாங்க, தனது ஓய்வூதிய பணத்தை செலவிட்டு வருகிறார். தான் இளமையில் வறுமையில் பாதிக்கப்பட்டதால், ஏழை மாணவர்கள், படிப்பதற்கு எந்த சிரமமும் இருக்கக் கூடாது என்பதற்காக, ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு, இவற்றை வழங்கி வருவதாக தெரிவித்தார்.போளூர், வணக்கம்பாடி, கீழ்பெண்ணாத்துார், குருவிமலை போன்ற பகுதிகள், இப்போதும், பொருளாதாரத்தில் பின்தங்கியே காணப்படுகின்றன.அங்குள்ள அரசுப் பள்ளிகளில், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குழந்தைகள் படிப்பதால், தனது சேவையை சொந்த ஊரான குருவிமலையில் இருந்து துவங்கி உள்ளார். ''இளமையில் படிக்கும் கல்வி, பசுமரத்தாணி போல பதிந்து விடும். ஆனால், படிப்பதற்கான அடிப்படை பொருட்களை வாங்குவதற்கு கூட, அந்த பகுதி மாணவர்களுக்கு பொருளாதார வசதி இருப்பதில்லை. எனவே, என்னால் முடிந்த வரையில், மாணவ ர்களுக்கு உதவி வருகிறேன். எனது கடைசி காலம் வரையிலும், இந்த பணி தொடர வேண்டும் என்பது, எனது விருப்பம்,'' என்றார், சுப்பிரமணியன். கல்விச் சேவையில் ஈடுபடுவதற்கு, சுப்பிரமணியத்தின் குடும்பம் உறுதுணையாக இருக்கிறது. அவரது மனைவி வள்ளி,67, தனது தள்ளாத வயதிலும், தனது கணவரோடு, பல்வேறு இடங்களுக்கு சென்று வருகிறார். கோயம்பேட்டுக்கு அருகில் சுப்பிரமணியத்தின் வீடு இருப்பதால், பேருந்து மூலமாகவே, அனைத்து ஊர்களுக்கும் சென்று வருகின்றனர்.ஒவ்வொரு முறையும், திருவண்ணாமலை, வேலுார் ஆகிய ஊர்களுக்கு சென்று வரும்போதெல்லாம், தம்பதியர் கடுமையான உடல்வலியால் பாதிக்கப்படுகின்றனர்.ஏனெனில், அங்குள்ள கிராமங்களுக்கு செல்லும் சாலைகள், மிக மோசமாக இருக்குமாம். 'அந்த வலியில் இருந்து, மீண்டு வருவதற்கு, ஒருவார காலமாவது ஆகும். இருந்தாலும், அந்த வலியை, நான் விரும்பியே நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்' என, பெருமை கொள்கின்றனர் தம்பதிகள். தொடர்புக்கு: 97910 39646 - அ.ப.இராசா -

    No comments: