Pages

Saturday, September 20, 2014

மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த தலைமையாசிரியர்களுக்கு ஆலோசனை

மேல்நிலை தேர்வுகளை நடத்த மூவர் குழுவை நியமிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக, மாவட்ட செயற்குழு கூட்டம் காரைக்குடியில் நடந்தது. செயலாளர் சிவகுமார் வரவேற்றார். பொருளாளர் முத்து துரை, மகளிர் ஆசிரியர் செயலாளர் சகாய அருள்செல்வி, மாவட்ட தனியார் பள்ளி செயலாளர் தியாகராஜன், மாவட்ட இணை செயலாளர் பாண்டிக்குமார் பேசினர்.


மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்து பேசியதாவது: காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வு தவிர மற்ற இடை தேர்வுகள், மாத தேர்வுகள், தற்போது மூன்று மணி நேரமாக நடத்தப்படுகிறது. இதனால், கற்றல் கற்பித்தல், கால அவகாசம் குறைகிறது. எனவே, இதை ஒன்றரை மணி நேரமாக குறைக்க வேண்டும்.

வினாத்தாள் தயாரிக்கும், முதுகலை ஆசிரியர்களுக்கு, உழைப்பூதியம் மீண்டும் வழங்க வேண்டும். தேர்வுகளை நடத்த ஒரு தலைமை ஆசிரியர் மட்டுமே உள்ளார். இதை தவிர்த்து, ஒரு தலைமை ஆசிரியர், ஒரு கல்வி மாவட்டத்துக்கு முதுகலை ஆசிரியர் இருவர் வீதம் மூன்று பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.