Pages

Wednesday, September 24, 2014

உண்மை தன்மை அறியும் சான்றிதழ் வாங்க நீங்கள் எதுவும் செய்ய வேண்டியது இல்லை.

அனைத்தும் உங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் பார்த்து கொள்வார். நீங்கள் உங்களுடைய பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ மதிப்பெண் பட்டியல் மூன்று நகல்களை அவர்களிடம் ஒப்படையுங்கள். இளநிலை, முதுநிலை மற்றும் பி.எட். , பட்டத்திற்கான உண்மை தன்மை அறியும் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா?


1. சென்னை பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டத்திற்கு உண்மை தன்மை அறியும் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. மற்ற பல்கலைக்கழகங்கள் கட்டணம் பெறுகின்றன. அதுவும் அரசு பள்ளி ஆசிரியர் என்றால் அதற்கு கட்டணம் குறைவு. விண்ணப்பிக்கும் போது பள்ளி தலைமை ஆசிரியர் அளிக்கும் கடிதம், உங்கள் பட்ட சான்றிதழின் நகல் இரண்டையும் சேர்த்து பதிவு தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.

2. பி.எட்., பட்டத்திற்கு உண்மை தன்மை அறியும் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் போது உங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் தரும் கடிதம், உங்கள் பி.எட் மதிப்பெண் பட்டியல், புராவிசனல் சர்ட்டிபிகேட் மற்றும் பட்டம் மூன்றின் நகலையும் அனுப்ப வேண்டும்.

உண்மை தன்மை சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் முன்பு நீங்கள் படித்த பல்கலைக்கழகத்திற்கு போன் செய்து உரிய கட்டணம் பற்றிய தகவல் அறிந்து பின்னர் விண்ணப்பிங்கள்.

1 comment:

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.