Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, September 10, 2014

    ஓர் ஆசிரியையின் குமுறல்!

    ஆயிரம் போராட்டங்களுக்கு நடுவில் அல்லல்பட்டு, படித்து, வெற்றி பெற்ற எங்களுக்கு இனச்சலுகை என்ற உருவில் எமன் எதிரில் வந்துள்ளான்.

    “சாதிகள் இல்லையடி பாப்பா” என்ற பாரதியின் வரிகளைச் சொல்லித் தரும் ஆசிரியர்களுக்கு இனச் சலுகை என்ற அடிப்படையில் பணி நியமனம் என்ன கொடுமை இது ?


    “வாழும் வரை போராடு” என்றார்கள். உண்மை தான்  போராட்டம் என்று வந்துவிட்டால் வாழ்வே முடிந்துவிடும் என்று நிரூபிக்க முன் வந்தார்கள் எம் குலத்தார். விஷம் அருந்தி வெற்றி பெற்ற எங்களை வேண்டாத வெறுப்புடன் 
    பார்க்கிறார்கள். 

    தனியார் பள்ளிகள்

    திடீர் திடீரென்று தீர்ப்புகளை மாற்றுபவர்களே நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு நானூறு தீர்ப்புகளை சொல்லிவிட உங்களால் மட்டும் முடியும். 

    ஆனால் துன்பம் என்ற போர்வைக்குள் அகப்பட்டுக் கொண்டு, துயரப்பட்டு, போராடி படித்து வெற்றி பெற எங்களைப் போன்ற ஆசிரியர்களால் மட்டும் தான் முடியும் புரிந்து கொள்ளுங்கள். எங்களைப் போன்ற ஆசிரியர்கள் இல்லையென்றால்,  படித்த நீங்கள் எங்கே?

    பத்து வருடங்களுக்கு முன்னால் படித்தவர்கள் நிலையோ, இன்று பைத்தியம் பிடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. மனம், விரக்தி அடைந்துவிட்டது வீதியிலோ! எங்கள் ஆசிரியர் குலம் தங்கள் உரிமைக்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது! ஐயோ! இது என்ன கொடுமை?

    நாங்கள் விடும் கண்ணீர் உங்கள் நெஞ்சங்களைக் கரைக்கவில்லையா? எங்களைப் படைத்த ஆண்டவன் கூட இன்று ஏறெடுத்துப் பார்க்க மறுத்தது ஏனோ? மண்ணுலகம் எங்களை எள்ளி ஏசுகிறது. விண்ணுலகமோ வா… வா… என்று வரவேற்கிறது.

    பெற்ற பிள்ளைகளை விட்டு விட்டு, மனம் ஏனோ விண்ணுலகம் செல்ல மறுக்கிறது. எங்கள் வாழ்வோ! இரண்டிற்கும் இடையில் ஊசல் ஆடுகிறது.

    ஆண்டவா!  எதற்கு இந்த கபட நாடகம், எங்கள் குல ஆசிரியர்கள் வாழ்வில் ஒளி ஏற்ற யார் உருவிலும் வரமாட்டாயா? எங்கே போவோம்? யாரிடம் போய் கேட்போம் ? வினா இங்கே! விடை எங்கே?.

    (மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு, அன்பு வணக்கம்.  தயவு செய்து இதை பிரசுரம் செய்ய தாழ்மையுடன் வேண்டுகின்றேன். நன்றி)

    Article By, தகுதித் தேர்வில் வெற்றி பெற்று பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பாக,
    திருமதி. சுஜாதா கரூர்.

    2 comments:

    Unknown said...

    சில்தினங்களூக்குமுன் ஒரு வருடமாக கணிணி ஆசிரியர்கள் இல்லாமல் ஒரு வருடமாக+2 மாணவர்கள் அர்சுப்பள்ளிகளில்படித்து வருகின்றனர்.அவர்களி ன்எதிர்காலம்?என் வினா எழுப்பியிருந்தேன்அரசு நல்ல அறிவிப்பைத்தந்துள்ளது. போராடும் பட்டதாரிகளுக்கும் நல்ல அறிவிப்பைத் தாருங்கள்!.நன்றி

    veerasekar said...

    This World See Everthing

    IF ANYTHING FOR SELF IT IS LIFE
    FOR OTHERS IT IS TREATED AS STORY...

    A moral on today.