இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகாரம் புதுப்பிக்கப்படாத மருத்துவ கல்லுாரிகளுக்கு, மாணவர்களை சேர்க்க, சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சம்மந்தபட்ட மருத்துவ கல்லுாரி நிர்வாகங்கள் தரப்பில், "ஒரு சில குறைபாடுகளால், எங்களின் அங்கீகாரத்தை புதுப்பிக்க, இந்திய மருத்துவ கவுன்சில் மறுத்து விட்டது.
இந்த குறைபாடுகளை, விரைவில் சரிசெய்து விடுவோம். எனவே, மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, "சம்மந்தபட்ட கல்லுாரி நிர்வாகங்கள், தங்கள் கல்லுாரிகளில், எந்த குறைபாடும் இல்லை என்பதை உறுதிசெய்து 10 நாட்களுக்குள் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
அந்த அறிக்கை தவறாக இருந்தால் சம்மந்தபட்ட கல்லுாரி நிர்வாகங்கள், மருத்துவ கவுன்சிலில் ஏற்கனவே டிபாசிட் செய்துள்ள 10 கோடி ரூபாயை இழக்க நேரிடும்" என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.